Pages

Friday, May 11, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை!

பேராவூரணி மே.11-
காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமையில்  நடைபெற்றது.  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே.வி.கிருஷ்ணன், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கத்
தலைவராக ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளராக ஏ.கே.பழனிவேலு, பொருளாளராக சி.கணேசன், அமைப்பாளராக கே.வி.கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் சு.போசு, வி.கோபால், ஏ.கே.வெள்ளிமலை, மு.வீரா,
நா.வெங்கடேசன், ஆறு.நீலகண்டன், அமுதம் கந்தசாமி, வீ.கருப்பையன், பொன்.ராமமூர்த்தி, எஸ்.ஜகுபர்அலி  உள்ளிட்ட 25 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டது.

கூட்டத்தில், " அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை  இடையே விரைந்து ரயில்சேவையை தொடங்க வலியுறுத்துவது, அதற்காக கவன ஈர்ப்பு துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, ரயில்வே அதிகாரிகளை, மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, ரயில் சேவை பணிகளை தொடங்க வலியுறுத்துவது" எனவும்  தீர்மானிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...