Pages

Monday, May 7, 2018

திருக்குர் ஆன் மாநாடு ~ நிறைவு விழா (நேரடி ரிப்போர்ட்)

அதிராம்பட்டினம், மே 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளிவிழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு புதுமனைத்தெரு, முஹையித்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த நிறைவு நாள் விழாவுக்கு, புதுமனைத்தெரு, முஹையித்தீன் ஜும்ஆ பள்ளி இமாம் மவ்லவி. எம்.ஏ. முகம்மது நெய்னா தலைமை வகித்தார். திருக்குர் ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், ஹாஜி எம்.பி அபூபக்கர் (கோட்டை அமீர் விருது பெற்றவர்), குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன், பல்மருத்துவர் டாக்டர் எம்.பஜ்லூர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹில் ஹுதா அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி சபியுல்லாஹ் ஃபாஜில் பாகவி, “இறைமறை போற்றும் கல்வி” என்ற தலைப்பிலும்,  சென்னை, பிராட்வே மஸ்ஜித்  லஜ்னத்துல் முஹ்ஸினீன்  பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி எஸ்.பகுருதீன் ஃபாஜில் பாகவி, “வான்மறை கூறும் வரலாறுகளும், படிப்பினைகளும்” என்ற தலைப்பிலும், இராஜகிரி மஸ்ஜித் தக்வா பள்ளிவாசல் இமாம் மவ்லவி எம்.எம் சாகுல் ஹமீது ஃபைஜி, “இறைமறையின் பார்வையில் இயற்கை சீற்றங்கள்” என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.

விழாவையொட்டி, வினாடி-வினா, பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் மனனம், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 3 வயது, 7 வயது, 10 வயது, 15 வயது, 20 வயது ஆகிய பிரிவுகளில் 1400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். நிறைவு விழா நாள் நிகழ்ச்சியில், 10, 15, 20 வயது பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவிகள், ஆலிம், ஆலிமாக்கள் உட்பட 542 பேருக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், பார்வையாளர்களுக்கான கேள்வி - பதில் நிகழ்ச்சியில் குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மஹ்மூது மகன் எம். அப்துல் ஹாலிக் (வயது 51) என்ற சமூக ஆர்வலரின் சேவையைப் பாராட்டி ரூ.10 ஆயிரம் பொற்கிழி மற்றும் கேடயப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார். பரிசினை திருக்குர் ஆன் மாநாட்டுக் குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் வழங்கினார்.

முன்னதாக, தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி எம்.எப். முகம்மது தமீம் ரஹ்மானி ஹழ்ரத் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொகுத்து வழங்கினர். அதிரை பைத்துல்மால்
இணைச்செயலாளர் எச். முகமது இப்ராஹீம் ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில், அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் நன்றி கூறினார்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் மற்றும் நிர்வாகிகள், திருக்குர் ஆன் மாநாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...