Pages

Tuesday, May 8, 2018

அதிரையில் ஒரு நாள் மக்தப் மாநாடு ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 08
தீனியாத் மக்தப் சென்டர் சார்பில், ஒரு நாள் மக்தப் மாநாடு அதிராம்பட்டினம், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, அன்வாருஸ் ஸுஃப்பா தீனியாத் மக்தப் வழிகாட்டி  பொறுப்பாளர் மவ்லவி அப்துல்லா பாகவி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் முன்னிலை வகித்தார்.

அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லவி அப்துல்லா தொடக்க உரை ஆற்றி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மக்தப் மதரஸா மாணவர் அப்துல் பத்தாஹ் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில், மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், பார்வையற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், பவர் பாயிண்ட் காணொளி மூலம் மக்தப் வரலாறு, மக்தப் பாடத் திட்டங்கள் சிறப்பு அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை மவ்லவி சல்மான் யூசுஃபி, மவ்லவி கலீல் அகமது முனீரி, மவ்லவி. இஸ்மாயில் ஆகியோர் நடத்தினர்.

விழாவில், அல்ஹரமைன் டிரஸ்ட் நிர்வாகி ஹாஜி ரஃபீக் சாஹிப் சிறப்புரை வழங்கினார். மவ்லவி தர்வேஷ் ரஷாதி மாநாடு நிறைவு உரை நிகழ்த்தினார். முடிவில், சிறப்பு பிரார்த்தனையுடன் (துஆ) மாநாடு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

இம்மாநாட்டில், பெண்கள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்கள், சிறுமிகளுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாநாடு துளிகள்:
1. வேலூர் மாவட்டம், மேல்விசாரம் மதரஸா இம்தாதியா அரபிக்கல்லூரியில் கல்வி பயிலும் கண் பார்வை இழந்த அப்துல் ரஹீம் (15), ஷாஜஹான் (7), செய்யத் ஆதில் (15) ஆகிய 3 மாணவர்கள் பிரேலி மொழி வடிவ எழுத்தில் புடைக்கப்பட்ட குர்ஆன் சூரா ஓதி, மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களை நெகிழ வைத்தனர்.

2. தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் கிராத் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வென்ற அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவர் அல்ஹாபிழ் அஹமத் ஜாபர் ஓதிய குர்ஆன் கிராத், மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

3. மாநாட்டின் ஒரு பகுதியாக, அஸர் முதல் மஹ்ரிப் தொழுகை வரையில் அதிராம்பட்டினம் மக்தப் சென்டருக்கு உட்பட மதரஸா மாணவர்களின் அரபி மொழி கீதங்கள், தமிழ்-அரபி மொழி உரையாடல், மக்தப் வகுப்பறை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...