Pages

Friday, May 4, 2018

ஆமை வேகத்தில் நடக்கும் காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதையை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை!

பட்டுக்கோட்டை, மே.04
ஆமை வேகத்தில் நடந்து வரும் காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதையை விரைந்து முடிக்க வேண்டும் - தமுஎகச பட்டுக்கோட்டை கிளை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது கிளை மாநாடு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தேன். கிளைச்செயலாளர் முருக.சரவணன் வரவேற்றார்.

இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவராக முருக.சரவணன், செயலாளராக மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளராக பக்கிரிசாமி ஆகியோரும், துணைத் தலைவர்களாக க.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் வீரமணி, துணைச் செயலாளர்களாக கோ.ஆறுமுகம், டபிள்யூ.கிறிஸ்துதாஸ், திராவிட பிரகாஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தமுஎகச மாநில துணைச்செயலாளர் கவிஞர் களப்பிரன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.

இக்கூட்டத்தில், "6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் காரைக்குடி- திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகளுக்கு, போதிய நிதி ஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து, சென்னை வரை ரயிலை இயக்க வேண்டும். முதல்கட்டமாக பணிகள் நிறைவு பெற்று சோதனை ஓட்டம் நடைபெற்ற காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உடனடியாக பயணிகள் ரயில் சேவையை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டையார் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், திரைக்கலைஞர்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில், தமிழக அரசு விருது வழங்க வேண்டும் எனக் கேட்டும்" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளை தோழர்கள் கண்.எழில், தமிழவன், வாஞ்சிநாதன், ஞானசூரியன், சிவ.ரவி உள்ளிட்ட பலர் கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...