Pages

Tuesday, May 8, 2018

குவைத்தில் வெளிநாட்டினரால் பலத்த அடிவாங்கிய ரியல் எஸ்டேட் துறை!

அதிரை நியூஸ்: மே 08
குவைத்தில் பல தொழில்களும் நசிந்துள்ள நிலையில் ரியல் எஸ்டேட் துறை பலத்த சரிவை சந்தித்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. குவைத்தில் தற்போது சுமார் 75,000 பிளாட்டுக்கள் காலியாக உள்ளதாகவும், இவற்றில் சுமார் 49,130 பிளாட்டுகள் ஏற்கனவே கட்டப்பட்டவை என்றும், சுமார் 26,466 பிளாட்டுக்கள் முடிவுறுதருவாயிலும் உள்ளதாக குவைத் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஹ்மது அல் துவைஹீஸ் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கடந்த 4 முதல் 5 வருடங்களுக்குள் இச்சரிவு ஏற்பட்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 95 சதவிகித பிளாட்டுக்கள் வாடகைக்கு விடப்பட்ட நிலையில் அது தற்போது 8.2 சதவிகிதம் காலியானதால் 86.2 சதவிகிதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

மாதாந்திர பிளாட்டு வாடகை சராசரியாக 278.9 குவைத் தீனாரிலிருந்து 242 தீனாராக குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 13.2 சதவிகித வாடகை வருமான வீழ்ச்சியாகும். இந்த ஆய்வு குவைத் முழுவதும் 19 வேறுபட்ட பகுதிகளின் 5,695 மனைகளில் அமைந்துள்ள சுமார் 162,576 பிளாட்டுக்களில் எடுக்கப்பட்டதாக அல் முர்ஷத் எனும் ரியல் எஸ்டேட் தொடர்புடைய பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

காரணங்கள் என்ன?
பெரும்பாலான பிளாட்டுக்களில் வெளிநாட்டவர்களே குடியிருந்தனர். குவைத்தில் சமீபத்தில் மின்சாரக் கட்டணம், மருத்துவக் கட்டணம், பல்வேறு சேவைக் கட்டணங்கள், அனைத்துப் பொருட்களின் மீதும் ஏறிய விலைவாசி போன்ற முக்கிய காரணிகளே வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரை பிளாட்டுகளை காலி செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பிவிட்டு பேச்சுலர்களோடு பேச்சுலர்களாக வாழும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காகவே அரசு வேலைகளிலிருந்த பல வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்புக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன மேலும் பணி ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் சில குவைத் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகின்றனர்.

குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.5 மில்லியன் பேரில் 3ல் 2 பங்கினர் வெளிநாட்டவர்களே. இவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4.8 சதவிகிதம் என உயர்ந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 2 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டது. இந்நிலை தொடர்ந்தால் இனி வரும் 5 ஆண்டுகளில் மேலும் 1.5 சதவிகித சரிவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, வெளிநாட்டினர்களுக்கு வேலையில்லை என்றால் உள்நாட்டினருக்கும் அது பல வகையிலும் இழப்புத் தான் என்பது நிரூபனமாகியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...