Pages

Wednesday, May 2, 2018

எதிஹாத் ஏர்வேஸ் எகனாமி வகுப்பு பயணிகளுக்கு சிறப்புச் சலுகை!

அதிரை நியூஸ்: மே 02
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனம் எதிஹாத். இந்த எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து அபுதாபி வழியாக செல்லும் எகனாமி வகுப்பு பயணிகள் இலவசமாக ஹோட்டல்களில் ஒர் இரவு தங்கிச் செல்லும் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்புச் சலுகையின்படி, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, மொராக்கோ, எகிப்து, ஜோர்டான், நைஜீரியா, குவைத், தான்சானியா, கென்யா, பஹ்ரைன், ஓமன், சூடான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து அபுதாபி வழியாக பறக்கும் பயணிகளை அபுதாபி விமான நிலையம் அருகிலுள்ள யாஸ் தீவில் (Yas Island) அமைந்துள்ள ரேடிஸன் புளூ (Radisson Blu), யாஸ் ஐலேண்ட் ரோட்டனா (Yas Island Rotana) ஆகிய ஹோட்டல்களில் ஓர் இரவு இலவசமாக எதிஹாத் சார்பில் தங்கியிருந்து சுற்றிப்பார்த்து செல்லலாம்.

இந்த சிறப்புச் சலுகை எதிர்வரும் 2018 செப்டம்பர் 15 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

யாஸ் தீவு (YAS ISLAND) மற்றும் அதன் அருகிலுள்ள சுற்றுலா தளங்கள்:
1. யாஸ் வாட்டர் வேல்டு (Yas Water World) எனும் நீர் விளையாட்டுப் பூங்கா

2. பார்முலா 1 கார் பந்தயம் நடைபெறும் யாஸ் மரீனா சர்க்யூட் )Formula 1: Yas Marina Circuit)

3. பெப்ராரி வேல்டு அபுதாபி எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா (Ferrari World Abu Dhabi)

4. விரைவில் திறக்கப்படவுள்ள வார்னர் பிரதர்ஸின் தீம் பார்க் (Warner Bros. Theme Park from 2018 July onward)

5. கலாச்சர மையமான மனாரத் அல் சாதியாத் மற்றும் லவ்ரே மியூஸியம் (Cultural institutions such as Manarat Al Saadiyat and the Louvre Museum)

6. யாஸ் மால், அபுதாபி மால், மரீனா மால், கலேரியா போன்ற பெரும்பெரும் வணிக மையங்கள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள்

7. அழகிய கடற்கரைகள் மற்றும் பாலைவன சபாரி பயணங்கள் என இன்னும் பல... என பொழுதை கழிக்கும் அம்சங்கள் ஏராளம் உள்ளன.

குறிப்பு:
ஓர் இரவு ஹோட்டலில் இலவசமாக தங்கவும், டிரான்ஸிட்டில் உள்ளே செல்லவும் மட்டுமே எதிஹாத் பொறுப்பு மற்ற செலவினங்கள் அனைத்தும் உங்களுடையதே.

மேலும் விபரங்களுக்கு எதிஹாத் ஏர்வேஸின் இணைய தளத்தை பார்வையிடவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...