Pages

Saturday, May 19, 2018

சவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள பகுதிக்கு புதிய கார்பெட்!

அதிரை நியூஸ்: மே 19
சவுதி, புனிதமிகு மதினா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள பகுதிக்கு புதிய கார்பெட்!

புனிதமிகு மதினாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் அல்லாஹ்வின் தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலமும் அவர்களின் இருபுறமும் கண்ணியமிகு தோழர்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர்களின் அடக்கத்தலங்களும் அருகருகே அமைந்துள்ளன.

மதினாவிற்கு ஜியாரத் செய்யச் செல்லும் அனைத்து முஸ்லீம்களும் ரசூலே கரீம் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு அங்கு ஸலாமும் ஸலவாத்தும் சொல்லிச் செல்வார்கள். ஜியாரத் செய்வோர் கடந்து செல்லவதற்காகவே அங்கு சிறப்பு நடைபாதையும் உள்ளது. இந்த நடைபாதையில் இதுவரை இருந்த சிவப்புநிற கார்பெட் அகற்றப்பட்டு புதிய பச்சை நிற கார்பெட் போடப்பட்டுள்ளது.

பாப் அல் ஸலாம் எனும் நுழைவாயில் முதல் பாபே பகீ நுழைவாயில் (Bab Al-Salam to Bab-e-Baqi) வரை சுமார் 250 புதிய கார்பெட்டுக்களை இரு புனிதப் பள்ளிகளுக்கான தலைமை நிர்வாகம் அமைத்து தந்துள்ளது. இந்த கார்பெட்டுகள் சவுதி அரேபிய நெசவாளர்களால் கைகளால் பின்னப்பட்டதாகும்.(New green carpets produced by Saudi hands)

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...