Pages

Thursday, May 10, 2018

பட்டுக்கோட்டையில் புகையிலை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் (படங்கள்)

பட்டுக்கோட்டை, மே 10
பட்டுக்கோட்டையில் புகையிலை பொருள்களுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை ஜே. சி. ஐ. விங்ஸ் இயக்கம் நடத்திய ஸ்கேட்டிங் ஓட்டத்தை கீழப் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், ஜே.சி.ஐ. மண்டலத் தலைவர் க. வெங்கடேஷ் தலைமையில் 6 முதல் 8 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் 40 பேர் பங்கேற்றனர். இவர்கள் புகையிலை பொருள்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் அட்டைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும், வழிநெடுகிலும் புகையிலை பொருள்களின் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தலைமை அஞ்சலகம், மணிக்கூண்டு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் சென்றதும் ஸ்கேட்டிங் ஓட்டம் நிறைவடைந்தது. பின்னர் அங்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பான் செக்கர்ஸ் பப்ளிக் பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் ஜெயராணி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். பட்டுக்கோட்டை ஜே. சி. ஐ. விங்ஸ் இயக்கத் தலைவர் வினோத்குமார் வரவேற்றார். செயலர் நாடிமுத்து நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...