Pages

Monday, May 7, 2018

பேராவூரணி அருகே தீ விபத்தில் மளிகைக்கடை எரிந்து நாசம் (படங்கள்)

பேராவூரணி, மே.07
பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மகன் முத்துவேல் (வயது 51). முத்துவேல் குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியில் அம்மன் ஸ்டோர் என்ற பெயரில் கூரைக் கட்டிடத்தில் மளிகைக்கடை, கூல்டிரிங்ஸ் கடை, மற்றும் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

ஞாயிறு அன்று வியாபாரத்தை முடித்து விட்டு, இரவு 10 மணி வாக்கில் முத்துவேல் கடையை பூட்டி விட்டு வீடு சென்றார். இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு முத்துவேலின் கடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக முத்துவேலுக்கும், பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

ஆனாலும் இவ்விபத்தில் முத்துவேலின் கடை முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மளிகைக்கடை பொருட்கள், பிரிட்ஜ், ஸ்டுடியோவில் இருந்த கேமரா, கம்ப்யூட்டர் சாதனங்கள் என சேதமதிப்பு ரூ 5 இலட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, காவல்துறை உதவி ஆய்வாளர் இராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...