Pages

Saturday, May 5, 2018

படுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஸிபாவின் சகோதரிக்கு கல்வி வழங்க கேரள முஸ்லீம் அமைப்பு முடிவு!

அதிரை நியூஸ்: மே 05
படுகொலை செய்யப்பட்ட காஷ்மீரச் சிறுமி ஆஸிபாவின் சகோதரிக்கு கல்வி வழங்க கேரள முஸ்லீம் அமைப்பு முடிவு

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் கதுவா என்ற ஊரில் 8 நாட்கள் கோயிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பல காட்டுமிரண்டிகளால் 8 வயது சிறுமி ஆஸிபா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல மனிதநேயமுள்ள அனைத்து உலக நாட்டு மக்களையும் உலுக்கியதுடன் அதன் தாக்கம் இன்னும் மறையவில்லை.

கொல்லப்பட்ட சிறுமி ஆஸிபாவின் பக்கர்வால் (Bakarwal community) எனும் சமூகம் ஓர் நடோடி முஸ்லீம் சமூகமாகும். இவர்களின் பிரதான தொழில் ஆடு, மாடு, குதிரைகள் போன்ற கால்நடைகளை மேய்ப்பதாகும். எனவே, இவர்கள் எந்தவொரு ஊரிலும் நிரந்தரமாக தங்காமல் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உகந்த பருவகாலத்திற்கு ஏற்றவாறு இடம் மாறிச் செல்வார்கள் என்பதால் இவர்களுக்கு முறையான கல்வியறிவு கிடைப்பதில்லை என்றாலும் இவர்களின் குழந்தைகளுக்காக வருடத்தில் சுமார் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் சிறப்பு ஆரம்பப்பாடசாலைகள் சில செயல்பட்டு வருகின்றன. இப்படியானதொரு பள்ளிக்கூடத்தில் சிறுமி ஆஸிபாவின் மூத்த சகோதரி 7 ஆம் வகுப்பு வரை பயன்று தேறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கரந்தூர் என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது மர்கஸூ ஸகாபத்தில் சுன்னிய்யா (Markazu Ssaqafathi Ssunniyya) எனும் இஸ்லாமிய கலாச்சார அமைப்பு (The Sunni cultural center). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் 'எஸ் இந்தியா அறக்கட்டளை' (Yes India Foundation) இந்தியா முழுவதும் 21 பாடசாலைகளை நடத்தி வருகிறது.

இந்த பள்ளிகளில் விரும்பிய ஏதாவது ஒன்றில் இணைந்து தனது பள்ளிப்படிப்பை தொடருமாறும், மேல்நிலை கல்வியை முடித்தபின் கேரளாவிலுள்ள மர்கஸின் சட்டக் கல்லூரியில் அல்லது இந்தியாவில் விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடத்தை மர்கஸ் செலவில் பயிலலாம் என அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புற்கு முன்பாக பக்கர்வால் சமூகத் தலைவர்களுடன் சட்ட நிபுணர்கள், கல்வி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசணை நடத்தினர்.

மேலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்களது அடிப்படை உரிமைகள் பற்றிக்கூட ஏதும் அறியாதுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை உரிமைகளை கற்றுத்தரும் விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் புனித ரமலானுக்குப் பின் முன்னுரிமை தந்து விரைவாக செயல்படுத்தப்படும் எனவும் மர்கஸ் நடத்தும் சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் சமது புலிக்காட் அவர்கள் தெரிவித்தார், இதற்கு தேவையான உதவிகளை செய்து தர ஜம்மு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சையது சர்ஃபராஸ் ஹூசைன் ஷா உறுதியளித்துள்ளார்.

மர்கஸின் தலைவர் ஷேக் அபூபக்கர் அஹமது, கல்வித்தகுதி வாய்ந்த 2 ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களை இனங்கண்டும் அவர்கள் இலவசமாக கேரளாவில் மர்கஸ் நடத்தும் சட்டக்கல்லூரியில பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என 'எஸ் இந்தியா பவுண்டேசனின்' இயக்குனர் சௌகத் நுஐமி அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

2 comments:

  1. நல்ல தேவையான சிறந்த முயற்சி. இது வெற்றி பெற வேண்டுகிறேன் இறைவனிடம்.

    ReplyDelete
  2. நல்ல தேவையான சிறந்த முயற்சி. இது வெற்றி பெற வேண்டுகிறேன் இறைவனிடம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...