Pages

Wednesday, May 2, 2018

துபையில் தங்கம் மொத்த விற்பனை வாட் வரி நீக்கம்!

அதிரை நியூஸ்: மே 02
துபையில் தங்கம் மொத்த விற்பனையின் மீதான வாட் வரி நீக்கப்பட்டது

துபையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து பொருட்களின் மீதும் 5% வாட் வரி விதிக்கப்பட்டது. துபையின் முக்கிய வர்த்தகங்களில் ஒன்று தங்கம். இந்த 5% வாட் வரி (VAT Tax) விதிப்பு மற்றும் 5% இறக்குமதி வரிவிதிப்பு (Import Tax) போன்ற இரட்டை வரி தாக்குதல்களால் கடந்த 4 மாதங்களில் துபையின் தங்க நகை விற்பனை பெருமளவு முடங்கியதை தொடர்ந்து தங்க நகைகள் மொத்த விற்பனை மட்டங்களில் (Only at Whole Sale Level) வசூலிக்கப்பட்டு வரும் 5% வாட் வரியை மட்டும் துபை அரசு நீக்கியுள்ளது.

இந்த சலுகையின் மூலம் தங்கம் சில்லறை விற்பனை ஓரளவு மீண்டும் சூடுபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் சில்லறையில் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் பயனை நேரடியாக அனுபவிக்காத வரை பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என்றும் சில தஙக நகை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...