Pages

Monday, May 7, 2018

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்களிக்க வேண்டும் ~ பட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் தீர்மானம்!

பட்டுக்கோட்டை மே.07
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது மாவட்ட மாநாடு, பட்டுக்கோட்டை எம்என்வி மஹால் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நினைவரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு களப்பிரன், ஆயிராசு, இரா.இராஜகோபால், த.சுத்தானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆம்பல் காமராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் தொடக்கவுரையாற்றினார். கலை இலக்கிய அறிக்கையை ச.ஜீவபாரதி, பண்பாட்டு அறிக்கையை இரா.விஜயகுமார், வேலை அறிக்கையை ப.சத்தியநாதன், வரவு-செலவு அறிக்கையை முருக.சரவணன் ஆகியோரும் வாசித்தனர்.

நிர்வாகிகள் தேர்வு 
அறிக்கை மீதான விவாதம், அறிக்கை நிறைவேற்றுதலுக்கு பிறகு புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தமுஎகச மாவட்டத் தலைவராக சா.ஜீவபாரதி, மாவட்டச்செயலாளராக இரா.விஜயகுமார், மாவட்ட பொருளாளராக முருக.சரவணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் துணைத் தலைவர்களாக ஆயிராசு, வல்லம் தாஜ்பால், துணைச் செயலாளர்களாக ப.சத்தியநாதன், கா.அசோக்குமார் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக மேலை நீலமேகம், லெனின் பாரதி, சுத்தானந்தன், சமந்தா, மோரீஸ் அண்ணாதுரை, அகல்யா தாசன், பாரிசிவன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமுஎகச மாநில துணைத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் மருத்துவர் மு.செல்லப்பன், இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைத்தலைவர் மருத்துவர் சி.வி.பத்மாநந்தன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா நிறைவுரையாற்றினார். நிறைவாக மோரீஸ் அண்ணாதுரை நன்றி கூறினார்.

முன்னதாக நாடகவியலாளர் இராமானுஜம் நினைவு கவி ஓவிய கண்காட்சியை கே.கிருஷ்ணமூர்த்தியும், பறையாட்ட கலைஞர் ரெட்டிப்பாளையம் ரெங்கராஜன் நினைவு கீழடி கண்காட்சி அரங்கை ரெ.ஞானசூரியனும், இந்தி எதிர்ப்பு கண்காட்சியை சிவ.ரவியும் திறந்து வைத்தனர்.

தீர்மானம் 
"மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், அவரது பெயரில் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்க வேண்டும், பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரம் பெயரில் கலையரங்கம் அமைக்க வேண்டும். மணிமண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டும்"  என தமிழக அரசை கேட்டுக் கொண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அகல ரயில்பாதை பணிகள் முடிந்த காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே முழுமையாக ரயில் சேவையை தொடரவேண்டும். பட்டுக்கோட்டை-தஞ்சை வழியே சென்னைக்கு செல்லும் வகையில் போடப்பட்ட ரயில்பாதை பணியை உடனடியாக தொடங்கவேண்டும். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள நூல்களை பாதுகாத்திட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழைய நூல்களை கணினிமயமாக்க வேண்டும். தஞ்சையில் உள்ள மாவட்ட நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். ஆய்வுத்துறை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீனப்படுத்தவேண்டும்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய, காவிரி படுகையை பெட்ரோலிய மண்டலமாக்க மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்களிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...