Pages

Monday, May 14, 2018

CBD சேவை அமைப்பின் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

மதுக்கூர், மே 14
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி-2018, மதுக்கூர் பூங்கொடி திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் மதுக்கூர் ஏ.அகமது முஸ்தபா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் சி. சுப்பிரமணியன், மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் ஏ. ஆனந்ததாண்டவம், மதுக்கூர் அர்ரஹ்மான் மழலையர் தொடக்கப்பள்ளி முன்னாள் தாளாளர் எம். கஃபார் அன்சாரி, சிபிடி அமைப்பின் மாநில குருதி ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ் குர்ஷித் ஹுசைன், சிபிடி அமைப்பின் மாவட்டச் செயலர், உறவுகள் அமைப்பின் நிறுவனர் என்.காலித் அகமது ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இதில், இரத்த தானம், விபத்தில்லா தேசம், சாலை பாதுகாப்பு, இளைஞர் நலன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் கால அவசர உதவி, தூய்மைப் பணிகள் ஆகியவை குறித்து பேசப்பட்டன.

முன்னதாக, அவ்வமைப்பின் ஜே.இஜாஸ் அகமது வரவேற்றுப் பேசினார். முடிவில் எச்.இம்தியாஸ் அகமது நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், சிபிடி அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

6 comments:

 1. No medicine required: Even however they are more powerful than customary CBD Oils, most unadulterated CBD Oils don't require a solution.
  cbd kaufen

  ReplyDelete
 2. Medication tests are searching for THC, not CBD, and in light of the fact that CBD doesn't create any sort of high, businesses truly have no motivation to search for it in any case. cbd

  ReplyDelete
 3. This is an ongoing term that has been begat for medicinal utilization of maryjane, yet utilizing it for this reason for existing isn't so new. verifiedcbd.com

  ReplyDelete
 4. It is essential to relinquish the difficult past and any put away outrage, fear, stress, disdain, second thoughts and blame. earth clay

  ReplyDelete
 5. The most elevated increment in opening rates recorded for absolute office space crosswise over CBD vape oil Australia was for Adelaide CBD with a slight increment of 1.6 percent from 6.6 percent.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...