Pages

Thursday, June 7, 2018

மக்காவில் புனித ரமலானின் கடைசி 10 இரவுகளின் வணக்க வழிபாடுகளுக்கு குவியும் யாத்ரீகர்களுக்கு சேவையாற்ற 10000 பேர்!

அதிரை நியூஸ்: ஜூன் 07
புனித ரமலானின் கடைசி 10 இரவுகளின் வணக்க வழிபாடுகளுக்காக குவியும் யாத்ரீகர்களுக்கு சேவையாற்ற 10,000க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

புனிதமிகு ரமலானில் புனிதமிக்க மக்காவில் அமைந்துள்ள கஃபத்துல்லாஹ்வை நோக்கி உலகெங்கிலுமிருந்து 10 இரவுகளை வணக்க வழிபாடுகளில் கழிப்பதற்காக இறை நம்பிக்கையாளர்களான முஸ்லீம்கள் மில்லியன் கணக்கில் குவிந்தவண்ணம் உள்ளனர். இவர்களுக்கு பலவகையிலும் உதவுவதற்காக அரசு, தனியார் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் என பல்லாயிரக்கணக்காணோர் சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்துடன் இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகத்தின் சார்பாக 10,000க்கு மேற்பட்ட ஆண், பெண் தொண்டர்கள் யாத்ரீகர்களுக்கு உதவி புரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஹரம் ஷரீஃபின் 210 நுழைவாயில்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் 38 வாயில்கள் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் 7 வாயில்கள் பெண்களுக்காகவும் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

28 நகரும் படிக்கட்டுகளும், 7 இணைப்பு பாலங்களும், 10,000 சக்கர நாற்காலிகளும், 700 மின் ஸ்கூட்டர்களும் சேவையில் உள்ளன. ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் கீழ்தளம், தரைத்தளம், முதல் தளம், மடஃப் (Mataf) மற்றும் மஸ்ஆ (Mas'a) பகுதிகள், கிங் அப்துல்லா விரிவாக்கப் பகுதிகள் என சுத்தம் செய்யும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் சுமார் 107,000 இறை நம்பிக்கையாளர்கள் தவாஃப் செய்திடும் வகையில் மடஃப் விரிவாக்கப்பகுதிகளுடன் வடபுற விரிவாக்கப் பகுதிகளில் 80 சதவிகிதமும் திறந்து விடப்பட்டுள்ளன. புனித ஹரம் ஷரீஃபிற்கான சிறப்பு அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படையினரும் ஆயிரக்கணக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மக்காவின் மேயர் அலுவலகம் சார்பாக மக்கமா நகரை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக 11,825 துப்புரவு பணியாளர்களும், 850 துப்புரவு பணிகளுக்கான வண்டிகளும் பணியில் உள்ளன. தனியார் வாகனங்களில் வரும் யாத்ரீகர்களுக்காக மக்கா நகரைச் சுற்றி 9 பார்க்கிங் வசதிகளை மக்கா போக்குவரத்து துறை செய்துள்ளதுடன் இவர்களை ஹரம் ஷரீஃபிற்கு ஏற்றி வரவும், திரும்பக் கொண்டு விடவும் 100 மேற்பட்ட ஷட்டில் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சுகாதாரத்துறை தேவையான மருத்துவ முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்கும் நிலையில் புனித ஹரம் ஷரீஃபிற்கான சிறப்பு அவசரகால மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட டாக்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான் அவர்களும் ஹரம் ஷரீஃபில் தங்கி இஃதிகாப் எனும் புனிதக் கடமையை நிறைவேற்றி வருகிறார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...