Pages

Wednesday, June 6, 2018

அமீரகத்தில் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் ஓய்வு நேரம் அமல்!

அதிரை நியூஸ்: ஜூன் 06
எதிர்வரும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கட்டாய பகல் ஓய்வு நேரம் அமலாகிறது.

வருடா வருடம் கோடைக்காலத்தின் போது தகிக்கும் வெயிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றும் நோக்குடன் அமீரக அரசால் 2.30 மணிநேரம் கட்டாய ஓய்வு வழங்கப்படுவது வழக்கம், இதேபோன்றதொரு ஓய்வு நேரங்களை அண்டை அரபுநாடுகளும் வழங்கி வருகின்றன என்றாலும் நேரம் மற்றும் துவங்கும் தேதிகளில் சில மாற்றங்கள் காணப்படும்.

நேரடியாக திறந்தவெளியில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான இந்த வருடத்திற்கான பகல் கால கட்டாய ஓய்வு நேரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பகல் 12.30 மணிமுதல் மாலை 3 மணி வரை வழங்கிட அமீரக மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுத்திடும் வகையில் நிழலகத்தை ஏற்படுத்தி தருவதும் நிறுவனங்களின் கடமை.

தினமும் பணிபுரியும் இந்த 8 மணிநேரத்தையே ஓய்வு நேரம் தவிர்த்து காலை, மாலை என 2 ஷிப்ட்டுகளாக பிரித்து தர வேண்டும் என்றும், கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு ஓவர்டைம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் விளக்கியுள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களின் மீது தொழிலாளர் ஒருவருக்கு 5,000 திர்ஹம் வீதம் அபராதம் விதிக்கப்படும், ஆகக்கூடுதலான தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டிருந்தால் 50,000 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்த முடியாத சில விதிவிலக்கு பெற்ற வேலைகளான அஸ்பால்ட் மிக்ஸ் காங்கிரீட், அத்தியாவசிய காலங்களில் பள்ளம் தோண்டுதல், குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவற்றிற்காக பள்ளம் வெட்டுதல் மற்றும் ரோட்டின் குறுக்கே வெட்டுதல், போக்குவரத்தை தற்காலிகமாக மறித்தல், கேஸ் பைப்லைன் வெட்டுதல் ஆகிய பணிகளின் போது தொழிலாளர்களுக்கு தேவையான குளிர்ந்த குடிநீர், உப்புடன் எலுமிச்சை பழங்கள், முதலுதவி சாதனங்கள், குளிர் காற்றிற்கான ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...