Pages

Sunday, June 10, 2018

அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் பிறை 27 சிறப்பு நிகழ்ச்சிகள்!

File Image
அதிராம்பட்டினம், ஜூன் 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு ஆகியவை கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் சுவையான நோன்பு கஞ்சி விநியோக்கிப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும், பள்ளிவாசலில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ், வித்துரு தொழுகைகள், திக்ரு, ஹிஸ்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் போன்றோர் பயன்பெறும் வகையில் தினமும் அதிகாலையில் நோன்பு நோற்பதற்காக 'சஹர்' நேர இலவச விருந்து உபசரிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை திங்கட்கிழமை இரவு ரமலான் பிறை 27 ஐ முன்னிட்டு பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு தராவிஹ் தொழுகை முடிந்தவுடன் 10 மணிக்கு அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். பின்னர், துஆ ஓதி தப்ரூக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மஹல்லாவாசிகள் மற்றும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் திரளாக கலந்துகொண்டு சிற்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை தக்வா பள்ளிவாசல் மஹல்லாத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் மற்றும் ஹாஜி எம்.என் அப்துல் ஜப்பார், ஏ.சாகுல் ஹமீது உள்ளிட்ட மஹல்லா நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...