Pages

Monday, June 25, 2018

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் ECR ல் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு!

மல்லிபட்டினம், ஜூன் 25
தஞ்சை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில செயலாளர், மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்கத் தலைவர் அ.தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலார் க. வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க முன்னாள் தலைவர் து. செல்வக்கிளி, தலைவர் மு.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கடந்த ஏப். 15 ந் தேதி முதல், ஜூன் 14 ந் தேதி வரையிலான 61 நாட்கள் மீன் இனப்பெருக்கம் என்கிற அடிப்படையில் அரசின் தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இக்காலங்களில் இஞ்சின் பொருத்தப்பட்ட மற்ற  அனைத்து நாட்டுப்படகுகளையும் மீன் பிடித் தொழில் செய்ய அனுமதித்தது அரசின் நோக்கம் நிறைவேறாமலும், மீன் இனப்பெருக்கம் அடையாமலும் விசைப்படகு மீனவர்கள் நஷ்டம் அடையச் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும், மனித உரிமை மீறல் செயலாகும், இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது.

2. கடல் சீற்றம் என்றும், விசைப்படகு தொழில் செய்ய செல்லக்கூடாது என உத்தரவிட்டு, மீனவர்கள் வாழ்வாதரங்களை சீர்கேட வைத்து, அவர்களின் ஜீவாதார உரிமையில் தலையிட்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசின் அனுமதி சீட்டு பெறாமல் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கிட மீன்பிடித் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள் மீது தண்டனை வழங்குவோம் எனவும், அரசின் வரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் வழங்கமாட்டோம் என மீனவர்களின் அடிப்படை உரிமையை பறித்து, சட்டம் என்ற காரணத்தைக் கூறி விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைய  வைத்துள்ளது. அரசு இப்போக்கை கைவிட்டு முன்பு போல் செயல்பட துறை அலுவலர்களுக்கு  அரசு உத்தரவிட வேண்டும்.

3. மீன் பிடி தடைகாலம் கடந்த ஏப்.15 ந் தேதிக்கு பிறகு 61 நாட்கள் கடன்பட்டு, பசி, பட்டினியுடன் படகுகளை எடுக்கும் போது, தொழிலுக்கு செல்லக்கூடாது எனவும், சங்க நிர்வாகம் பொறுபேற்றுக்கொள்கிறோம் என பொறுப்புக் கடிதம் கொடுத்து, அதன்படி கடலுக்கு சென்று எவ்வித குறைபாடுமின்றி தொழில் செய்து திரும்பியது. இந்நிலையில், தொழிலுக்கு சென்ற படகுகளை தண்டனை வழங்குவோம் என துறை மூலம் கடிதம் அளிப்பது, எங்கள் தொழிலை அழிக்கும் நிலைக்கு அரசு வந்துள்ளதோ என மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  தண்டனை வழங்குவோம் என்பதையும், அடிக்கடி தொழில் நிறுத்தம் செய்வதையும் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4. ஜூன், ஜூலை மாதங்களில் கடலின் தென் திசையிலிருந்து காற்று 45 முதல் 55 வரை வேகத்துடன் வழமையான ஒன்றே. இந்த காலங்களில் மீனவர்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தொழிலுக்கு செல்வதும், நிறுத்திக்கொள்வதும் மீனவர்களாகிய எங்களுக்கு நன்கு அனுபவம் ஆனதே. அதுமட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 20 ந் தேதி அரசு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கியும், மீனவர்களாகிய நாங்கள் காற்றின் வேகத்தை கணக்கீட்டு நாங்களாகவே நிறுத்திக்கொண்டோம். இப்படி நாங்களாகவே தொழில் நிறத்திக்கொள்வதும், பகலில் மட்டும் தொழில் செய்துவிட்டு மாலை மணிக்குள் கரை திரும்பி விடுவதும் வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அரசின் அனுமதியின்றி செல்லக்கூடாது என கூறுவது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வது மிகவும் வேதனைக்குரியது. இந்நிலையை மாற்றி மீனவர்களின் ஆலோசனைகளை பெற்று சிறு கடல்பகுதியான அலையே இல்லாத தஞ்சை மாவட்டப் பகுதியில் அடிக்கடி அனுமதி வழங்காமல் படகை நிறுத்தும் போக்கை கைவிட வேண்டும். என மாநில அரசினையும், துறை அலுவலர்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏழை மீனவர்களின் பசி, பட்டினி வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்வரும் ஜூன் 29 ந் தேதி மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் காலை 9 மணிக்கு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 

1 comment:

  1. இந்த கூட்டத்தில் சாபிக் ஏன் வரவில்லை மல்லிபட்டினம் நண்பர்கள் விலக்கம் தரவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...