Pages

Saturday, June 9, 2018

தஞ்சையில் இரு இடங்களில் இன்று (ஜூன் 9) நீதிபதி பணிக்கான போட்டித் தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை (ஜூன் 9) நடத்தும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வு தஞ்சாவூரில் இரு இடங்களில் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

இதுதொடர்பாக ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் மேலும் தெரிவித்தது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உரிமையியல் நீதிபதி போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தஞ்சாவூரில் இத்தேர்வு அரசர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரராகவா மேல்நிலைப் பள்ளி மையங்களில் நடைபெறும். இதில், 395 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இம்மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. தேர்வுகளைக் கண்காணிப்பதற்கு இயங்குக் குழுத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பறக்கும் படை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் வினாத்தாள் வைக்கப்படும் இடத்தில் போதுமான காவல் துறைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்லிடப்பேசி, கால்குலேட்டர் மற்றும் நவீன மின்னணு பொருட்கள் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். மாவட்ட நீதிபதி வி. சிவஞானம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், கூடுதல் பதிவாளர் (கண்காணிப்பு) எம். சாய் சரவணன், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...