Pages

Monday, June 4, 2018

சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினா குடில்களில் அடுக்கு கட்டில் படுக்கைகள் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜூன் 04
இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினா குடில்களில் அடுக்கு கட்டில் படுக்கைகள் அறிமுகம்

ஹஜ் யாத்திரையின் ஒரு அங்கமாக மினாவில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் ஒருநாள் தங்க வேண்டும். இந்த குடில்கள் காலத்தின் கட்டாயத்தால் தீப்பிடிக்காதவையாக, நவீன ஏசி மெஷின்கள் பொருத்தப்பட்டதாக பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது.

இந்த மாற்றங்களில் ஒன்றாக தற்போது இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வரும் பயணிகளின் வசதிகளை கருத்திற்கொண்டு முதன்முறையாக மினா குடில்களில் அடுக்கு கட்டில் படுக்கைகள் (Bunk Beds) அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் யாத்ரீகர்கள் தங்களுடைய பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும், தாராளமாக இடவசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் இயலும் என ஹஜ் மற்றும் உம்ராவுக்காக அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

இவ்வருடம் அறிமுகஞ்செய்யப்படும் இந்த அடுக்கு படுக்கை கட்டில் வசதிகள் வெற்றிபெற்றால் இது வரும் ஹஜ் காலங்களில் பிற நாட்டு மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இப்படுக்கைகள் அனைத்தும் கடும் பாதுகாப்பு சோதனை விதிகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகள் என்பவை யாவை?: 
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேப்பாள், பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா மற்றும் மியான்மார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...