Pages

Monday, June 11, 2018

உணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூன் 11
சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் குப்பையில் தூக்கி எறியப்படுகின்றனவாம் இதன் நிகர மதிப்பு ஆண்டுக்கு 49 பில்லியன் ரியால்களாகும். ஒவ்வொரு சவுதியரும் ஆண்டுக்கு சராசரியாக 250 கிலோ உணவை வீணடிக்கின்றனர் அதேவேளை உலகின் சராசரி உணவு வீணடித்தல் 115 கிலோ மட்டுமே.

பெரும்பாலான உணவுகளை வீணடிப்பவர்களாக டின்னர் பார்ட்டிகள் நடத்துவோர், திருமண விருந்துகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல் பஃபே உணவு நடத்துவோரே முன்னனியில் உள்ளனர். உலகில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு சராசரியாக 145 கிலோ உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில் சவுதியர்கள் 158 கிலோவை பயன்படுத்துவதன் மூலம் இதிலும் முதலிடத்திலேயே இருக்கின்றனர்.

கடந்த மாதம் கூடிய சவுதி அரேபியாவின் சூரா கவுன்சில் எனும் உயர்மட்ட ஆலோசணை மன்றத்தில் உணவை வீணடிப்போருக்கு அபராதம் விதிப்பது குறித்தும் சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் உணவகங்களுக்கு சென்று தட்டில் உணவை மிச்சம் வைத்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்க ஆலோசணைகள் வழங்கப்;பட்டன. அதேவேளை தேசிய மையம் ஒன்றை ஏற்படுத்தி உணவை வீணடிப்பதை குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...