Pages

Wednesday, June 13, 2018

அமீரகத்தில் தனியார் துறைக்கு கூடுதலாக பெருநாள் விடுமுறை இல்லை! ஊழியர்கள் ஏமாற்றம்!

அதிரை நியூஸ்: ஜூன் 13
அமீரகத்தில் இந்த வருட ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாளை கொண்டாட அரசு ஊழியர்களுக்கு நாளை வியாழன் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து தனியார் துறையினருக்கான விடுமுறை தின அறிவிப்புக்காக காத்திருந்தனர் ஆனால் இந்த வருட நோன்புப் பெருநாள் வரும் வெள்ளிக்கிழமை அன்று அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிறை கணக்கின்படி ஷவ்வால் மாதத்தின் முதல் 2 தினங்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் பொதுவாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்திர விடுமுறை நாட்களாகும் என்றாலும் பெருந்தொகையான ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வாராந்திர விடுமுறையாகவும் உள்ளது. இவ்வாறு வெள்ளிக்கிழமையை மட்டும் வாராந்திர விடுமுறையாக கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த பெருநாள் விடுமுறை அறிவிப்பால் ஒரேயொரு தினம் கூடுதல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த வருட ஷவ்வால் மாதத்தின் முதல் 2 தினங்கள் அமீரக வாராந்திர விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலேயே அமைய பெரும்பாலும் வாய்ப்புள்ளதால் கூடுதல் பெருநாள் விடுமுறைகளை எதிர்பார்த்திருந்த தனியார் துறை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றாலும் ஒருவேளை பிறை பார்ப்பதன் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளாக சனிக்கிழமை அமைந்தால் மட்டுமே தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறையாக அமைந்து வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

3 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு:
இதேபோல் அமீரகத்தில் செயல்படும் வங்கிகளுக்கு ஷவ்வால் மாதத்தின் முதல் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவை எதிர்வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூடப்பட்டிருக்கும். ஒருவேளை ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை சனிக்கிழமையாக அமையுமானால் திங்கள் வரை வங்கிகள் திறக்கப்படாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...