Pages

Wednesday, June 13, 2018

துபையில் ஜூலை முதல் வீடு தேடி வரும் போக்குவரத்து சேவைகள்!

அதிரை நியூஸ்: ஜூன் 13
துபையில் ஜூலை முதல் போக்குவரத்து துறையின் சில சேவைகள் உங்கள் வீடுகளை தேடி வரவுள்ளது

துபையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் வேலை மற்றும் தொழிலை பாதிக்காத வகையிலும் சில சேவைகளை வாடிக்கையாளர்களின் வீடுகளை தேடிவந்து வழங்கவுள்ளது துபை போக்குவரத்து துறை (RTA).

‘Reach-out-to-Customers’ என்ற இந்த புதிய சேவை திட்டத்தின் கீழ் ஆரம்பமாக புதிதாக வாகன உரிமை பதிவு செய்தல், வாகன உரிமை பறிமாற்றம், வாகன ஏற்றுமதிக்கான அனுமதி தருதல் மற்றும்  வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளை அமீரகம் முழுவதும் உங்களை தேடிவந்து வழங்கவுள்ளனர் துபை போக்குவரத்து துறையின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் (Service providers accredited by RTA).

பெறுகின்ற சேவைக்கான கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சேவை கட்டணம் எவ்வளவு, முகவருக்கான சேவை கட்டணம் எவ்வளவு மற்றும் எவ்வாறு இச்சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வது என்பது குறித்து எதுவும் தற்போதைய நிலையில் தெரிவிக்கப்படவில்லை.

துபையிலும், துபைக்கு வெளியிலுள்ள பிற எமிரேட்டுகளிலும் இருந்தவாறு இந்த சேவைகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் உங்கள் இருப்பிடம் தேடி வரும் முகவர் முன் நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் மேலும் பல சேவைகள் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...