Pages

Saturday, June 23, 2018

சாலை மறியல் செய்த திமுகவினர் கைது!

பேராவூரணி ஜூன்.23-
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்து பேராவூரணி பெரியார் சிலை அருகில் சனிக்கிழமை காலை சாலைமறியல் நடைபெற்றது. மறியலுக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இரா.வேலுச்சாமி, தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் மஜீத், இலக்கிய அணி ஆனந்தராஜ், மாவட்ட பிரதிநிதி மதிவாணன், அச்சகம் கோ.நீலகண்டன், பூக்கொல்லை கே.காமராஜ், கோவி.நீலகண்டன், சி.நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரெட்டவயல் 
ரெட்டவயல் கடைவீதியில் நடைபெற்ற சாலைமறிலுக்கு சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெருமகளூர் பேரூர் கழகச் செயலாளர் வி.பி.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, துணை அமைப்பாளர் முருகேசன், பெருமகளூர் பேரூர் கழக முன்னாள் பொருளாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரு இடங்களிலும் சாலைமறியலில் ஈடுபட்டதாக  நூற்றுக்கும் மேற்பட்ட  திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...