Pages

Sunday, June 24, 2018

அதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 24
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா தீன் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

விழாவிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது நிதிநிலை அறிக்கை வாசித்தார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் எஸ்.வீரபாண்டியன் அலுவல் ஆய்வு மற்றும் சேவை திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

லயன்ஸ் சங்க மாவட்ட அமைச்சரவை நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  முடிவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி நன்றி கூறினார்.

இவ்விழாவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.நெய்னா முகமது, சாரா எம். அகமது, எம்.சாகுல் ஹமீது, டி.பி.கே ராஜேந்திரன், என்.யூ ராமமூர்த்தி, பேராசிரியர் கே. முருகானந்தம், ஆர்.செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, பி. பிச்சை முத்து, எம்.நிஜாமுதீன், முல்லை ஆர். மதி, எம்.ஏ அப்துல் ஜலீல், நெய்னா முகமது, அபுல் ஹசன் சாதலி, ரெஜிஸ்கான், அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...