Pages

Thursday, June 21, 2018

பஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு ஒதுக்கக் கோரிக்கை!

அதிரை நியூஸ்: ஜூன் 21
பஹ்ரைனிலும் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு மட்டும் என ஒதுக்கக் கோரிக்கை

சவுதி, ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் சில குறிப்பிட்ட துறைகளிலுள்ள வேலைவாய்ப்புக்களை தனது சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே என ஒதுக்கியுள்ளன. இந்த அடிப்படையில் பஹ்ரைனிலும் சில துறைகளின் வேலைவாய்ப்புக்களை தனது குடிமக்களுக்கு மட்டுமே என சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் காஸி அல் ரஹ்மா பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஒட்டெடுப்பு எதிர்ப்புகள் ஏதுமின்றி ஏகமனதாக பஹ்ரைன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் வெளிநாட்டினரால் ஆண்டுதோறும் வெளியில் அனுப்பப்படும் சம்பளத்தொகையான 4.2 பில்லியன் பஹ்ரைன் தீனார் என்பதில் இனி பெருமளவு மிச்சப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடிமகன்களுக்கே முதல் உரிமை என்ற அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பஹ்ரைன் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இந்தக் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு இன்று மீண்டும் ஒட்டெடுப்பு வருகின்றது.

குறிப்பாக கணக்காளர்கள், சிறப்பு மனிதவளத் துறையினர், சட்ட ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள், நிதித்துறை நிபுணர்கள், சிறப்பு தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்கள் போன்ற பல துறைகளின் உயர்மட்ட பொறுப்புக்களை பஹ்ரைன் நாட்டவர்களுக்கே வழங்க வேண்டும் என கோடிட்டு காட்டியுள்ளார். இதன் மூலம் பஹ்ரைன் நாட்டவர்கள் மத்தியில் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை குறையும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Source: Gulfinsider
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...