Pages

Sunday, June 10, 2018

சவுதியில் நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஜவாஜத் (இமிக்கிரேசன்) செயல்படும் என அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 10
நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்களிலும் சவுதி ஜவாஜத் (இமிக்கிரேசன்) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவாஜத் எனப்படும் சவுதி அரேபியாவின் குடியேற்றம் மற்றும் குடியகல்வு துறை (இமிக்கிரேசன்) நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலம் மற்றும் இதர ஆவணத் தேவைகளுக்காக சவுதியர் மற்றும் வெளிநாட்டவர்களின் நலனுக்காக ஜவாஜத் திறந்து வைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலானின் போது காலை 10 மணிமுதல் மாலை 3 வரை திறந்திருக்கும் ஜவாஜத் அலுவலகங்கள் ஈகைப்பெருநாள் விடுமுறையின் போது காலை 8 மணிமுதல் மாலை 2.30 வரை திறந்திருக்கும். மேலும் விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் மற்றும் தரைவழி நுழைவு பகுதிகளில் வழமைபோல் 24 மணிநேரமும் ஜவாஜத் இயங்கும்.

சவுதியர்கள் அப்ஷர் எனும் ஆன்லைன் முறையில் புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதிப்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வாஸல் சேவையின் மூலம் அனுப்பித் தரப்படும் அல்லது ஜவாஜத் அலுவலகத்திற்கு நோன்புப் பெருநாள் விடுமுறை காலங்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் சவுதியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அப்ஷர், அப்ஷர் ஆமல் மற்றும் முகீம் ஆகிய திட்டங்களின் கீழ் எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் வழியாகவே விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் அவசரத் தேவை இருந்தால் மட்டுமே இவர்கள் ஜவாஜத் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால தேவைகளை கருத்திற்கொண்டு ஜவாஜத் துறையின் அனைத்துப் பிரிவும் பெருநாள் விடுமுறை தினங்களிலும் இயங்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...