Pages

Thursday, June 7, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில் இயக்கம்?

பேராவூரணி ஜூன்.07-
பேராவூரணி பேரூராட்சி மு.கிருஷ்ணமூர்த்தி நினைவு திருமண மண்டபத்தில் பேராவூரணி வட்ட இரயில்வே பயனாளிகள் சங்க சிறப்பு செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கே.வி.கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கச்செயலாளர் தென்னங்குடி ஏ.கே.பழனிவேலு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.வெள்ளிமலை, என்.பழனிவேலு, வி.கோபால், வை.சிதம்பரம், ஏ.சீனிவாசன், இப்னு, ராஜமாணிக்கம், எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காரைக்குடி, வழி பேராவூரணி- பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்று, ஒருநாள் பயணிகள் கட்டண ரயில்சேவை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே அதிகாரிகளுக்கு சங்கத்தின் மூலம் கடிதம் அனுப்பியும், நேரில் சந்தித்தும் பேசியிருப்பதன் அடிப்படையில், வரும் ஜூன்-16 அன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை மாற்றி, அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கும் விதமாக  ஜூலை 16 ஆம் தேதிக்கு மாற்றுவதென முடிவு செய்யப்பட்டது. தாமதமாகும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவாக பொருளாளர் துறையூர் கணேசன் நன்றி கூறினார்.

கூட்டம் நிறைவடைந்ததும் சங்க நிர்வாகிகள், அகில இந்திய ரயில் பயனாளிகள் மேம்பாட்டு குழு தலைவரும், பாஜக தேசியச் செயலாளருமான ஹெச்.ராஜாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இன்னும் ஒரு வார காலத்தில் ரயில் சேவை இயக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளதாக" தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...