Pages

Sunday, June 10, 2018

மதினா கடைவீதிகளில் பேரீத்தம் பழங்கள் வரத்து அதிகரிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 10
மதினா கடைவீதிகளில் பலவகையான இவ்வருட அறுவடை பேரீத்தம் பழங்களும் வரத்துவங்கின

புனித மதினா மாநகரில் இஸ்லாமிய வரலாற்றில் நீங்க இடம்பெற்றுள்ள பத்ரு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இவ்வருடம் விளைந்த பலவகையான பேரீத்தம் பழங்களும் ஆரம்பமாக விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.

தற்போது தான் பேரீத்தம் கனிகளின் அறுவடை காலம் துவங்கியுள்ளதால் சுமார் 3 கிலோ எடையுள்ள பெட்டிகள் 30 முதல் 55 சவுதி ரியால்கள் வரை விலை போய் கொண்டுள்ளன.

தற்போதைய நிலையில் பெட்டி விலை மேலும் உயரும் என்றும் பேரீத்தம் பழ வரத்து அதிகரிக்கத் துவங்கிய பின் இம்மாத இறுதியில் விலை படிப்படியாக குறையத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முழுஅளவில் பழங்கள் அறுவடை செய்யப்படுவதுடன் விற்பனையும் உச்சத்தில் இருக்கும் என மதினா கடைவீதிகளில் உள்ள பேரீத்தம் பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதினாவில் தான் பிரசித்தி பெற்றதும் மருத்துவ குணமிக்கதும் ஹதீஸ்களில் சிலாகித்து கூறப்பட்டுள்ளதுமான 'அஜ்வா' வகை பேரீத்தம் பழங்கள் உட்பட பல்வேறு உயர்ரக பேரீத்தம் பழங்கள் விளைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...