Pages

Wednesday, June 6, 2018

அமீரக வாழ் கேரள விவசாயிக்கு கின்னஸ் சாதனை விருது!

அதிரை நியூஸ்: ஜூன் 06
சுதீஷ் குருவாயூர் என்கிற கேரள விவசாயி அடிப்படையில் ஓர் எலக்ட்ரிகல் எஞ்சினியர். இவர் முன் எஞ்சினியராக வேலைபார்த்தது ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் துறையில் ஆனால் இன்று ஷார்ஜாவில் முழுநேர விவசாயியாக தன்னை மாற்றிக் கொண்டவர். தற்போது ஷார்ஜாவில் தன் விவசாய நிலத்தை சுற்றியுள்ள வீடுகளுக்கு தன்னுடைய விவசாய பண்ணையில் வளர்த்த காய்கறிகளை அன்றாடம் சப்ளை செய்து வரும் விவசாயி.

இவர் பாலைவன நாடான அமீரகத்தில் விவசாயியாக மாறி நெற்பயிர், பல்வேறு காய்கறிகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை விளைவித்து வருகிறார். இவரது விவசாய உழைப்பிற்குப் பின்னே லிம்கா உள்ளிட்ட பல்வேறு சாதனை விருதுகள் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடந்த செவ்வாய் அன்று 5,000 கறிவேப்பிலை கன்றுகளை வளர்த்து அதை வீடுகளில் வளர்ப்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியதன் அடிப்படையில் அதிகமாக கன்றுகளை விளைவித்து வழங்கியவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஷார்ஜாவில் தன்னுடைய வீட்டிற்குப் பின்புறமுள்ள நிலத்தில் நெற்பயிரை தென்னிந்திய பாரம்பரிய அடிப்படையில் வெற்றிகாரமாக விளைவித்து அதை ஷார்ஜாவில் செயல்படும் 3 இந்தியப் பள்ளி மாணவர்களை கொண்டு நேரடியாக அறுவடை செய்யச்செய்து மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்தார்.

இங்குள்ள பாலைவன மண்ணையே அடிப்படையாக கொண்டு புதுமையான முயற்சிகளின் மூலம் தனது வீட்டுத் தோட்டத்தில் மிக நீளமான வெண்டக்காயை  41.91cm/16.5 inches என்ற அளவிற்கு வளர்த்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதுடன் இயற்கையாக வளரும் வெண்டக்காயின் அளவைவிட மிகச்சிறிய செடியையும் 3.81cm  என்ற அளவிற்கு வளர்த்துள்ளார் ஆனால் அதன் காய்கள் செடியின் அளவைவிட 3 மடங்கு நீளமானதாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...