Pages

Friday, June 8, 2018

ரிச்வே கார்டனில் MST டிரேடர்ஸ் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சிராஜுதீன் (37). இவர் 'எம்.எஸ்.டி டிரேடர்ஸ்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை கடந்த 3 ஆண்டுகளாக சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் நடத்தி வருகிறார். இங்கு சிமெண்ட், செங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து வித பொருட்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தளவாடப் பொருட்களை நாள் வாடகைக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் சார்பில், இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலானில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கதிஜா மஹாலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மவ்லவி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். எம்.எஸ்.டி டிரேடர்ஸ் நிறுவனர் சிராஜுதீன் வரவேற்றுப் பேசினார். ஹாபிழ் மஹ்சின் காமில் சிறப்புரை வழங்கி பிரார்த்தனை செய்தார். நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்காக 15 வகையான இஃப்தார் உணவு வழங்கப்பட்டது. பின்னர், மஹ்ரிப் தொழுதவுடன் சுடச்சுட தேநீர் வழங்கப்பட்டன. இதில், சிறப்பு அழைப்பின் பேரில் பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட அதிரை பிரமுகர்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...