Pages

Thursday, July 5, 2018

அபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 18 முதல் பார்க்கிங் கட்டணம் கட்டாயம்!

அதிரை நியூஸ்: ஜூலை 05
அபுதாபியின் அனைத்து செக்டர்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் 18 முதல் பார்க்கிங் கட்டணம் கட்டாயமாகிறது

அபுதாபியில் கடந்த 2009 ஆம் ஆண்டு பார்க்கிங் கட்டணத் திட்டம் செயல்படத் துவங்கியது. இது ஒவ்வொரு செக்டராக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் முதல் அனைத்து செக்டர்களும் பார்க்கிங் கட்டணத்திற்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெஸிடென்ஷியல் ஏரியாக்களில் உள்ளவர்கள் உடனடியாக பார்க்கிங் பெர்மிட்டுகளுக்கு முன்பதிவு செய்து வீண் அபராதங்களை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் முதல் பெர்மிட்டிற்கு 800 திர்ஹமும் இரண்டாம் பெர்மிட்டிற்கு 1,200 திர்ஹமும் செலுத்த வேண்டும். இதையே சரிபாதி காலகட்டமாக பிரித்துக் கொண்டு முதலாவது பெர்மிட்டிற்கு 400 திர்ஹமும் இரண்டாம் பெர்மிட்டிற்கு 600 திர்ஹமும் செலுத்தலாம் அல்லது பிளாட்டுகளை காலிசெய்து கொண்டு பிற இடங்களுக்கு செல்வோர் உங்களுடைய வீட்டு ஒப்பந்த காலத்திற்கு ஏற்றவாறும் செலுத்தலாம்.

ரெஸிடென்ஷியல் ஏரியாக்களில் வாழும் அமீரகத்தினர் முதல் 4 வாகனங்கள் வரை பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டிடத்தில் வாடகைக்கு தங்கியிருப்போர் மற்றும் பில்டிங் ஓனர்கள் அதே கட்டிடத்தில் தங்கியிருக்கும் தங்களுடைய முதல்நிலை நெருங்கிய இரத்த உறவுகளுக்காகவும் (தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதரன், சகோதரி) கூடுதலாக 2 பார்க்கிங் பெர்மிட்டுகளை வாடகை ஓப்பந்தப் பத்திரம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

வாகனங்களை பார்க்கிங் பெர்மிட்டுகளில் குறிப்பிட்டுள்ளவாறே ரெஸிடென்ஷியல் பில்டிங் அருகிலுள்ள அந்தந்த பார்க்கிங் மண்டலங்களில் மட்டுமே வாகனங்களை பார்க்கிங்  செய்ய இயலும். அபுதாபியில் இரு வகையான பார்க்கிங் பகுதிகள் உள்ளன. கருப்பு மற்றும் நீலப் பச்சை வண்ணம் பூசப்பட்ட பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த மணிக்கு 2 திர்ஹமும், வெள்ளை மற்றும் நீலப் பச்சை வண்ணம் பூசப்பட்ட பிரிமியம் பார்க்கிங் பகுதிகளில் மணிக்கு 3 திர்ஹமும் செலுத்த வேண்டும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...