Pages

Monday, July 2, 2018

பீஹாரில் எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 2 கி.மீ ஓடிய 22 ரயில் பெட்டிகள்! (திக்! திக்!! வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூலை 02
கிழக்கு ரயில்வேயின் தர்பங்கா – சமஸ்டிபூர் செக்ஷனில் இயங்கும் ஜெய்நகர் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் டிட்லாகார்க் (Titlagarh) ஸ்டேஷனிலிருந்து 22 பெட்டிகள் நிறைய பயணிகளுடன் புறப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸின் அடுத்த நிறுத்தம் மதுபானி நிலையமாகும் ஆனால் ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதன் 22 பெட்டிகளும் கப்லிங் சரிவர இணையாததால் எஞ்சினிலிருந்து கழன்று கொண்டன.

ரயில் அதிவேகத்தில் இயங்கிய நிலையில் கழன்று கொண்டதால் 22 பெட்டிகளும் அதேவேகத்தில் நிற்காமல் சென்றன. ஒரு கட்டத்தில் பெட்டிகள் கழன்று கொண்டுள்ளதை உணர்ந்த ரயில் ஓட்டுனர் பெட்டிகள் எஞ்சினின் மீது மோதி விபத்து ஏற்பட்டுவிடாமல் இருக்க எஞ்சினை வேகமாக ஓட்டியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஒருவழியாக சுமார் 2 கி.மீ தூரத்திற்கு மேல் தனித்து ஓடிய 22 பெட்டிகளும் கஜோலி எனும் ரயில் நிலையம் அருகிலுள்ள பெஹ்தா எனும் கிராமத்தில் போய் நின்றதை தொடர்ந்து அதே எஞ்சின் மீண்டும் பெட்டிகள் அருகே கொண்டு வரப்பட்டு கப்லிங் சரயாக இணைக்கப்பட்டு பயணிகள் வயிற்றில் புளிகரைத்த தனது திக்! திக்!! பயணத்தை தொடர்ந்துள்ளது ரயில். 7 ரயில்வே ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு வழமைபோல் மேல்  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி ரயில்கள் தானாக ஓடுவது இது முதன்முறை அல்லவாம், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி கோரக்பூர் - முஸஃபர்பூர் பாஸஞ்சர் ரயில் ஒன்று ஹாஜிபூர் ரயில் நிலையத்தில் இன்னொரு கிராஸிங் ரயிலுக்கு தண்டவாள இணைப்பை மாற்றிக் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் எஞ்சின் இல்லாமல் 'ஓடிப்போன ரயிலை' ரயில்வே அதிகாரிகள் 17 நாட்கள் கழித்து கண்டுபிடித்து மீட்டு வந்த அதிசய சாதனையும் நிகழ்ந்துள்ளதாம்.

Source: Gulf News & Times of India
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...