Pages

Wednesday, July 4, 2018

2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெங்களுர் பெல் நிறுவனத்திலிருந்து புதிதாக தயாரித்து வரப்பெற்ற எம்.3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (04.07.2018) நேரில் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய எம்.3 மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்களில் (Ballot Unit 5500 Nos.  and Control Unit 3490 Nos)  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவனத்திடமிருந்து லாரிகள் மூலம் எடுத்து வரப்பெற்று, அவைகளை அனைத்தும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, 2019 பொதுத்  தேர்தல்களில் பயன்படுத்தப்படும். பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தனியாக வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.

பழைய எம்.2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் காட்டிலும், புதிய எம்.3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எளிதாக இயக்கும் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் பொருட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரெயில் முறையிலான எண்களைக் கொண்ட அச்சுகளை கொண்டுள்ளது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இவ்வாய்வின் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர்கள் அருணகிரி, ராமலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...