Pages

Sunday, July 8, 2018

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15 மணி நேரமாக குறைக்க கோரிக்கை!

பேராவூரணி  ஜூலை.08-
காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையேயான பயணதூரத்தை ஏற்கனவே இருந்தது போல 2.15 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பேராவூரணி வட்ட இரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. செயலாளர் ஏ.கே.பழனிவேலு வரவேற்றார். அமைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் இரயில் பயனாளிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று காரைக்குடி -பட்டுக்கோட்டை இடையே இரயிலை இயக்க உதவி செய்த திருச்சி சிவா எம்.பி, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் தென்னக இரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தும்,

காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையேயான 75 கிமீ தூரத்தை 3;30 மணி நேரத்தில் இருந்து, ஏற்கனவே இருந்தது போல 2;15 மணி நேரமாக பயண நேரத்தை  குறைத்து இயக்க வேண்டும். வாரம் இருமுறை என்பதை மாற்றி தினசரி 4 முறை இரயிலை இயக்க வேண்டும் எனவும்,

பேராவூணியில் இருந்து காரைக்குடி வழியாக சென்னை, இராமேஸ்வரம் செல்ல, பயணிகள் இறங்கி மாறாமல் பயணம் செய்யும் வகையில் தனிப் பெட்டி வசதி செய்யவேண்டும். போதுமான ஊழியர்களை நியமித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

மேலும் தினசரி இரயிலை இயக்குவது சம்பந்தமான கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள், இரயில்வே உயர் அலுவலர்களை சந்திப்பது" எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் ஏ.சீனிவாசன், இ.நாகராசன், வி.கோபால், இப்னு, ஆர்.பி.கோவிந்தன், வி.ராஜசேகர், கே.அடைக்கலம், வி.ராசமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...