Pages

Sunday, July 8, 2018

துபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதியவராக விடுதலை!

அதிரை நியூஸ்: ஜூலை 08
துபையில் 1987 ஆம் ஆண்டு விசா ரத்து செய்யப்பட்ட பின் சட்டவிரோதமாக துபையில் தங்கியிருந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது 67 வயதை அடைந்துள்ள முதியவர் ஒருவரை உடன்பிறந்த சகோதரன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் விடுதலையாகிறார்.

துபையில் கம்ப்யூட்டர்கள் பரவலாக நடைமுறைக்கு வராத காலத்தில் கைது செய்யப்பட்ட வாசுதேவன் மாதவ பணிக்கரால் எந்த ஆண்டில் எந்த தினத்தில் சரியாக கைது செய்யப்பட்டோம் என சரியாக சொல்லத் தெரியவில்லை, துபையிலுள்ள சிறை ஆவணங்களும் கண்டுபிடிக்க உதவவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக துபை போலீஸார் முன்பு முயற்சி செய்தபோது அவரது உறவினர்களை பாஸ்போர்டில் உள்ள முகவரியிலும் கண்டுபிடிக்க இயலவில்லை ஏனெனில் அந்த முகவரி அவர்கள் ஒரு சமயத்தில் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முகவரி.

சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் துபையிலுள்ள அல் அவீர் சிறைக்கு பணிநிமித்தமாக சென்றிருந்த போது தான் இவரைப் பற்றிய தகவலை அறிந்து உதவ முன்வந்துள்ளனர். எனினும் முதியவர் 'என்னை வீட்டிற்கு அழைத்துப் போங்கள்' என திரும்பத் திரும்ப சொல்லி அழுதாரே தவிர அவரால் எதையும் சரியாக நினைவுகூர்ந்து பதிலளிக்கத் தெரியவில்லை.

இறுதியாக, தூதரகத்தின் முயற்சியால் கேரளாவில் வெளிவரும் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையில் இவரது படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு அவரது சகோதரர் ஸ்ரீதரன் மாதவ பணிக்கர் என்பவர் வந்து வாசுதேவனை தனது சகோதரன் என அடையாளம் காட்டியுள்ளார். தற்போது வாசுதேவனை அவரது சகோதரர் ஸ்ரீதரனிடம் ஒப்படைக்கும் வேலைகளை துவங்கியுள்ளது இந்திய தூதரகமும் துபை போலீஸூம்.

ஸ்ரீதரன் வாசுதேவனை 1980 ஆம் ஆண்டு தன்னுடன் தச்சு வேலைகள் செய்வதற்காக பம்பாய்க்கு (மும்பை) அழைத்துச் சென்றுள்ளார் ஆனால் வாசுதேவன் அங்கு நிற்காமல் ஊருக்கு திரும்பிவிட்டாராம், அதன் பின் வாசுதேவன் துபைக்கு போய்விட்டதாக ஒருமுறை கேள்விப்பட்டதோடு சரி இவர்களுக்கிடையே எந்தத் தொடர்பும் கடந்த 35 ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.

வாசுதேவன் தனக்கு ஒரு மனைவியும் 2 பிள்ளைகளும் இருப்பதாகவும் கூறுகிறார் ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியாது என்றும் மனைவிக்கு இரத்தப் புற்றுநோய் இருந்ததாகவும் கூறுகிறார் ஆனால் அவரது சகோதரர் ஸ்ரீதரனோ வாசுதேவனுக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றும் இது அவரது மனதில் எழும் மாயத் தோற்றமாகவும் இருக்கலாம் எனவும் கூறுகிறார். வாசுதேவனுக்கும் தன்னுடைய மனைவி மக்கள் அவர் துபை வரும்போது எங்கிருந்தார்கள், எங்கிருப்பார்கள் என சொல்லத் தெரியவில்லை, இனிதான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

சுமார் 30 ஆண்டு  சிறைவாசத்திற்குப் பின் விடுதலையாகி சகோதரனுடன் சேர்ந்து வாழ ஊர் திரும்பும் வாசுதேவனின் சோகத்திற்குள் மறைந்துள்ள ஒரே செய்தி இதுதான் 'குடும்பத்தோடு ஒட்டிவாழ், உறவினர்களை நேசி' என்பதாகும். இனி குடும்ப உறவுகள் கிடைத்தாலும் அவர்களின் பார்வையில் வாசுதேவன் ஒரு சுமையே. பாடம் புரியும் போது காலம் கடந்துவிட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...