Pages

Friday, July 20, 2018

சிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு செலவிட முன்வந்த அரசு மருத்துவருக்கு குவியும் பாராட்டு (படங்கள்)

தஞ்சாவூர் ஜூலை.20
பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் வீடு தேடி சென்று, பசும்பால், வெல்லம், நாட்டுக்கோழி முட்டை, இயற்கை காய்கறிகள் வழங்கப்படுகிறது.

இம் முகாமை வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தர்ராஜன் தலைமையில்,  சென்னை முதன்மை பூச்சியியல் வல்லுநர்  டாக்டர் குமார், தஞ்சை முதுநிலை பூச்சியியல் வல்லுநர் டாக்டர் ஆசிப், தஞ்சை மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்து செவ்வாய் அன்று தொடங்கி வைத்தனர்.

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வளர்க்கப்பட்டு வரும் பசுமாட்டில் இருந்து பெறப்படும் பாலில் நாட்டு வெல்லம் கலந்து வழங்கப்பட்டது. மேலும், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட சத்தான உணவுடன், சுகாதார நிலையத்தோட்டத்தில் வளரும் நாட்டுக்கோழி மூலம் பெறப்பட்ட முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக மிகவும் வறிய நிலையில் உள்ள 10 கர்ப்பிணித் தாய்மார்களை கண்டறிந்து, கிராம சுகாதார செவிலியர்களை கொண்டு அவர்கள் இல்லத்திற்கே சென்று பசும்பால், வெல்லம், முட்டை வழங்கப்பட்டு அவர்களது பிரசவம் வரை அவர்களது ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது.

பால், முட்டை, காய்கறிகள் வழங்குவதற்கும், கர்ப்பிணிகளுக்கு உதவவும் செங்கமங்கலம் பகுதிக்கு லில்லிமேரி, ஆவணம்- பெரியநாயகிபுரம் பகுதிக்கு மரகதம், களத்தூருக்கு ஜெசிந்தா ராணி, துறவிக்காட்டுக்கு நூர்ஜஹான், ஒட்டங்காட்டிற்கு தமிழ்செல்வி ஆகிய செவிலியர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அறிவானந்தம், கலைச்செல்வி, வெங்கடேஷ், தீபா, கோகிலா, ரஞ்சித், கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், மருந்தாளுநர் சரவணன், சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன்
கூறுகையில், 
"தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறந்த மருத்துவருக்கான விருதை வழங்கியது. அத்துடன் அரசு வழங்கிய ரூ 50 ஆயிரத்தை கொண்டு, பசுமாடு, நாட்டுக்கோழி வாங்கி இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளோம். பின்தங்கிய வறுமையான சூழலில் இருப்பவர்களை கண்டறிந்து முதல்கட்டமாக 10 பேருக்கு வழங்குகிறோம். நன்கொடையாளர்கள் உதவும்பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்தலாம்.

கர்ப்பிணிகள் பதிவு செய்தது முதல் பிரசவிக்கும் காலம் வரை இவ்வாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் பால், காய்கறிகள், முட்டை வழங்கப்படும். இந்த காலத்தில் கர்ப்பிணிகள் இரத்த சோகை, உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும். எங்களுடைய சக பணியாளர்கள் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது" என்றார்.

அரசு தனக்கு வழங்கிய நிதியை கர்ப்பிணிகளுக்கு செலவிட முன்வந்துள்ள அரசு மருத்துவரின் தன்னலமற்ற இச்சேவை பரவலாக பொதுமக்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...