Pages

Tuesday, July 10, 2018

பஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் புனிதப்பயணம்!

அதிரை நியூஸ்: ஜூலை 10
கோட்டா அதிகரிக்கப்பட்டதால் இந்த வருடம் பஹ்ரைனில் இருந்து 5,625 பேர் ஹஜ் யாத்திரை செல்கின்றனர்

குட்டித்தீவு அரபு நாடான பஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா இந்த வருடம் சுமார் 21 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டதால் சுமார் 5,625 பேர் ஹஜ் செய்ய வழியேற்பட்டுள்ளது, இதனால் கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 1,000 பேர் அதிகமாக ஹஜ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் என அனைவரும் ஹஜ் செய்ய செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரம் ஷரீஃப் விஸ்தரிப்பு பணிகளுக்காக 2014 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த பஹ்ரைனுக்கான கோட்டாவால் வருடத்திற்கு சுமார் 3,700 ஹஜ் யாத்ரீகர்களே செல்ல முடிந்ததும் தற்போது மீண்டும் வருடந்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சவுதி அரேபியா 1 மில்லியன் (10 லட்சம்) பேருக்கு 1,000 பேர் என்ற விகிதத்திலேயே ஹஜ் கோட்டா அனுமதியை வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...