Pages

Wednesday, July 11, 2018

சவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 கி.மீ தூரத்தில் புதிய சாலை திறப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 11
சவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திறக்கப்பட்டது.

எம்டி குவார்ட்டர் (Empty Quarter) எனப்படும் உலகின் மிகப்பெரும் பாலைவன மணற்பெருவெளி சவுதி அரேபியாவின் நிலத்தில் பெரும்பகுதியிலும், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இதனை ருப் அல் காலி (Rub Al Khali) என்றும் அழைக்கின்றனர்.

இந்த பாலைவன பெருவெளி வழியாக ஓமனுக்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளது.  சவுதியின் ஹரத் கிராமத்திலிருந்து (Haradh village) துவங்கும் இந்த புதிய பாலைவன நெடுஞ்சாலை அல் பத்தா நகரம் (Al Batha City) வழியாக அல் ஷைபா எண்ணெய் வயல் (Shaybah Oil Field) கடந்து சுமார் 700 கி.மீ தூரம் பயணித்து ஓமனின் எல்லையை அடையும்.

பாலைவனங்களில் சாலை அமைப்பதில் நிபுணத்துவமும் அனுபவமும் பெற்ற நிறுவனங்கள், கனரக இயந்திரங்கள், 600 தொழிலாளர்கள் என இணைந்து சுமார் 130 கியூபிக் மீட்டர் மணலை அகற்றி இச்சாலையை அமைத்துள்ளனர்.

ருப் அல் காலி – சிறு குறிப்பு:
தனிமையும் ஆபத்துக்களும் (The most desolate and dangerous desert) நிறைந்த இந்த பாலைவனப் பெருவெளியின் பெரும்பகுதி இன்னும் மனிதக் காலடிகள் படாததுடன் அது சுமந்து கொண்டுள்ள ரகசியங்களும் கண்டறியப்படாமலேயே உள்ளது (The world. It is also the largest contiguous desert that has remained mostly unexplored).

இப்பாலைவனத்திலேயே வசிக்கும் சிலரே இப்பாலைவனம் வழியாக கடந்து செல்லும் பயணிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றனர்(Desert-dwellers who live in Rub Al-Khali have acted as guides to authorities, researchers and travelers who want to pass through and explore the dangerous area).

புகழ்பெற்ற பிரிட்டீஷ் பயணியான வில்பிரட் தேசிகர் (The renowned British explorer Wilfred Thesiger) போன்ற பலர் தங்களின் பயணத்தை ஆவணமாக பதிவு செய்து வைத்துள்ளனர். ஷேக் அப்துல்லாவாக உயர்ந்தவரான செயிண்ட் ஜான் பில்பி என்பாரும் சவுதி அரேபியாவின் ஸ்தாபகர் என போற்றப்படும் மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் அனுமதி பெற்று இப்பாலைவனத்தை கடந்துள்ளார்.

கடுமையான இயற்கை சூழலையும் மிகக்குறைவான மனித நடமாட்டங்களையும் கொண்ட இப்பாலைவனம் 'முள் நிறைந்த பலா பழத்தினுள் இருக்கும் மதுரமான சுலைகள் போல' செரிவான எண்ணெய் வளம், இயற்கை வாயுக்கள், கதிர் வீச்சுக்களை வெளியிடும் உலோகங்கள், கண்ணாடி மண் மற்றும் சூரியஒளி தகடு மூலம் பெறப்படும் மின் ஆற்றல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் சோதனை அடிப்படையில் டிரில்லிங் மூலம் இப்பூமியை தோண்டிய பொழுது அல் ஹஸா நகரத்தில் உள்ளது போன்றே சுண்ணாம்பு பாறைகளுக்கு மத்தியில் சுவையான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...