Pages

Tuesday, July 17, 2018

தஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கு 9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கு 9 வட்டங்களிலும்
9 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் அலுவலக கூட்ட அரங்கில் காவிரியிலிருந்து திறக்கப்படவுள்ள தண்ணீர் மாவட்ட கடைமடை பகுதி  முழுவதும் சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (17.07.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 19.07.2018 அன்று காவிரி நீர் திறக்கப்படவுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகள் வரை சென்றடைவதை உறுதி செய்திட மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வட்ட அளவிலான அலுவலர்களை கொண்ட 9 குழுக்களும், வட்ட  அளவிலான குழுக்ககளின் செயல்பாடுகளை கண்காணிக்க 9 துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்களும், ஒட்டு மொத்த பணிகளை மேற்பார்வையிட பட்டுக்கோட்டை  கோட்டத்தில்  மாவட்;ட வருவாய் அலுவலர் அவர்களும், தஞ்சாவூர் கோட்டத்தில் குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர் அவர்களும், கும்பகோணம் கோட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அவர்களும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களும் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை சென்றடைவதை  உறுதி செய்யும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும்.  ஊரக பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அப்புறப்படுத்தப்பட்டு கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் கிடக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகளை தண்ணீர் செல்லும் வழிதடத்திலிருந்து  உடனடியாக அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாசன கால்வாய்களில் நீர் செல்வதற்கு இடையூறாக இருக்கும் தேங்கிய குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் அகற்றிட வேண்டும். ஆறுகள் மற்றும் கால்வாய் கரையோரங்களில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்படும் பட்டு போன மரங்கள் மற்றும் சேதமடைந்த மரங்கள் நீர் செல்வதற்கு தடையாக இருந்தால் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழு உடனடியாக அகற்றிட வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.6 கோடி மதிப்பீட்டில்  316 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெற்று வரும்  72 பராமரிப்பு பணிகளையும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 166 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெற்று வரும் கால்வாய்கள் மற்றும் ஏரிகள் பராமரிப்பு பணிகளையும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.2.9 கோடி மதி;ப்பீட்டில் 199 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெறும் 22 பணிகளையும், தமிழ்நாடு நீர் வள நில வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் சுமார் 158 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெற்றும் வரும் 17 பணிகளையும் விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல்,வேளாண் துறை இணை இயக்குநர் மதியழகன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், காவிரி கோட்ட செயற்பொறியாளர் இக்பால், வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துமீனாட்சி (பொது), முருகானந்தம் (விவசாயம்), சித்ரா (ஊரக வளர்ச்சி), வேளாண் துறை துணை இயக்குநர்கள் ஜஸ்டின், கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...