Pages

Saturday, July 7, 2018

வெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சிவகுரு பிரபாகரன் பேச்சு!

தஞ்சாவூர் ஜூலை.07-
'வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு மாணவர்கள் செயல்படவேண்டும்' என ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மா.சிவகுரு பிரபாகரன் பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை அன்று சீர்மிகு வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வை.கலைச்செல்வி வரவேற்றார். மாவட்டக்கல்வி அலுவலர் (பட்டுக்கோட்டை) கே.பாண்டியன் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட ரூ 1 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட  சீர்மிகு வகுப்பறையை (கணினி தொடுதிரை  ஸ்மார்ட் கிளாஸ்) திறந்து வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒட்டங்காடு பகுதியை சேர்ந்தவரும், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவருமான மா.சிவகுரு பிரபாகரன் பேசுகையில், 
"கோயிலுக்கு செய்வதை விட மாணவர்களுக்கு செய்வதே இறைவன் விரும்பும் செயலாகும். அரசுப்பள்ளியில் படித்த மாணவர் என்பதில் தான் எனக்குப் பெருமை. மாணவர்கள் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படவேண்டும். கிராமப்புற மாணவர்கள் குடிமைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றிப் படிக்கட்டில் ஒரு நாள் நிச்சயம் ஏறலாம்.  அரசுப்பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். அதற்கேற்ப பள்ளி ஆசிரியர்கள் உத்வேகத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும்  பணியாற்றி  வருவது பாராட்டத்தக்கது. இன்றைக்கு அமைக்கப்பட்ட கணினி வகுப்பறை இன்னும் இருபது ஆண்டுகளில் அதற்கான பலனைத் தரும். 100 அரசுப்பள்ளி மாணவர்களை சந்திக்க எண்ணியுள்ளேன். இதுவரை 23 அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கை, சுய முயற்சிகளுக்கு வழிகாட்டி உத்வேகம் அளித்து வருகிறேன். தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வருகிறேன். அரசுப் பள்ளி மாணவர்கள் தாழ்வுணர்ச்சி இன்றி, எதையும் சாதிக்கலாம். வானமே நமக்கு எல்லை" இவ்வாறு பேசினார்.

விழாவில் கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம், ஆசிரியர் பயிற்றுநர் பெமிலா, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் வீர.சந்திரசேகரன், மாறன் மற்றும் கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னையர் குழு, சத்துணவு அமைப்பாளர், சத்துணவு பணியாளர்கள், கிராமத்தார்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...