Pages

Thursday, July 5, 2018

நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை போதிக்கும் குழந்தைகள் விழிப்புணர்வு திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிட முடிவு: ஆட்சியர் தகவல்!

பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை போதிக்கும் வகையில் இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில்  குழந்தைகள் திரைப்பட விழா நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று ( 05.07.2018 ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட  ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது;
இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை போதிக்கும் வகையில் திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் தேர்வுகள் பாதிக்காத வகையில் அட்டவணை தயார் செய்து நடத்திட வேண்டும்.  திரையரங்குகளின் இருக்கைக்கு ஏற்றவாறு பள்ளிக் குழந்தைகளை அனுமதிக்க முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதிகமான குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் குழந்தைகளை திரையரங்குகளுக்கு அழைத்து வரும்போது உடன் ஆசிரியர்கள் வரவேண்டும்.

திரையரங்கத்தினர் திரையரங்குகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.  பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, ஃபேன் வசதி,  சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.  குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் சமயம் திரையரங்க பணியாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.  மின் சாதனங்கள், ஜெனரேட்டர்களுக்கு அருகில் மின் பணியாளரை பணியில் அமர்த்தி  பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும், திரையரங்க நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்க உதவி விநியோக அலுவலர் வி. எஸ் அகிலா, திரையரங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...