Pages

Saturday, July 14, 2018

அதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

கூட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளர் மா.சேகர் பேசுகிறார்
அதிராம்பட்டினம், ஜூலை 14
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகர் தலைமை வகித்து பேசியது; 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க கட்சியின் பொதுச் செயலர், துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள பொதுமக்களை கண்டறிந்து கட்சியில் இணைக்க வேண்டும்' என்றார். பின்னர், உறுப்பினர் படிவங்களை அதிரை பேரூர் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் அம்மா பேரவை துணைச்செயலாளர் எஸ்.டி.எஸ் செல்வம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அத்தியப்பன், பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர்பாபு, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தம்பி. ரமேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பஞ்சு ராமச்சந்திரன், அதிரை பேரூர் செயலாளர் ஜமால் முகமது, எம்.பி அபூபக்கர், ரபீக், எம்,எஸ்.டி சிராஜுதீன், அய்யாவு, ஹபீப் முகமது, அ.மு அப்துல் ஜப்பார், இஸ்மாயில் உள்ளிட்ட அமமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...