Pages

Thursday, July 19, 2018

சவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு!

அதிரை நியூஸ்: ஜூலை 19
இந்த வருட ஹஜ் சீஸனுக்காக செய்யப்பட்டுள்ள பல்வேறு ஏற்பாடுகள், மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து சவுதியின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் டாக்டர். முஹமது சலேஹ் பின் தாஹிர் பின்தான் அவர்கள் ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள ஹஜ் டெர்மினலில் அமைந்துள்ள ஹஜ்ஜூக்கான ஒருங்கிணைந்த அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி உள்நுழைவு மையங்களின் வழியாக ஹஜ்ஜூக்கு வரும் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், அவர்கள் காத்திருக்கும் நேரம், பாதுகாப்பு நடவடிக்கை போன்றவை கடந்த ஆண்டைவிட இந்த வருடம் எந்த வகைகளில் எல்லாம் ஏற்றம் பெற்றுள்ளன என கேட்டறிந்தார்.

சாலை பராமரிப்பு: 
புனித மக்காவை சுற்றியுள்ள 400 கி.மீ தூர சாலைகள் சுமார் 73 மில்லியன் சவுதி ரியால்கள் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தாயிப் - பஹா, தாயிப் - ரியாத், மக்கா – தாயிப், தாயிப் - ஹாவிய்யா மற்றும் ஹதா, மக்காவை சுற்றியுள்ள புனிதத் தலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஹரமைன், பிரிமான், ஹதா அல் ஷம்ஸ் ரோடு, ஜித்தாவிலிருந்து மக்கா நோக்கி வரும் சாலை ஆகியவையும் செம்மைபடுத்தப்பட்டுள்ளன.

புனிதத் தலங்களை சுற்றியுள்ள சாலைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சைன் போர்டு அறிவிப்புகள், டிராபிக் சிக்னல்கள், சாலை குறியீடுகள், எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், வேகத் தடைகள், வளைவுகளில் எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் இதர அபயகரமான பகுதிகள் என எச்சரிக்கும் அறிவிப்புகள் என நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கா மாகாணத்திற்குட்பட்ட சுமார் 1,000 கி.மீ சாலைகளின் இருபுறமும் புதிதாக புதிய தொழிற்நுட்பமான 'வைப்ரேசன் டெக்னாலஜி' எனும் உயர்தொழிற்நுட்ப முன்னெச்சரிக்கைக்கான பாதுகாப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

மக்கா - ஹதா ரோட்டிலுள்ள மேம்பாலங்கள், அல் புஹைத்தாவிலுள்ள மேம்பாலங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அல் ஹிஜ்ரா சாலை மற்றும் புனிதத் தலங்களின் சாலையோர மின்விளக்குகள் பராமரிக்கப்பட்டன என சவுதி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்குமிட வசதிகள்:
புனித மக்காவிலுள்ள 3,767 கட்டிடங்கள் ஹஜ் யாத்ர்pகர்களை தங்க வைப்பதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இந்த பில்டிங்குகளில் சுமார் 1.66 யாத்ரீகர்கள் தங்க முடியும். அதேபோல் மக்கா நகரின் மத்திய பகுதியான அஜீஸியாவில் 1,751 பில்டிங்குகள் உள்ளன இவற்றில் 850,319 ஹஜ் யாத்ரீகர்கள் தங்க முடியும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...