Pages

Wednesday, July 11, 2018

சவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரைவரை மன்னித்த மாமனிதர்!

அதிரை நியூஸ்: ஜூலை 11
சவுதி அரேபியாவின் அப்ஹா பிரதேசத்தின் ரிஜால் அல்மா கவர்னரேட் பகுதியில் நேற்று நடைபெற்ற வாகன விபத்து ஒன்றில் ஷேக் அலி அல் சலேஹ் என்ற முதியவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து பொறுப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கிய டிரைவர் ஒருவரால் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் ஷேக் அலி அல் சலேஹ் என்ற அந்த முதியவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்ட சென்றவர்களிடம் 'அந்த டிரைவரை நான் மன்னித்துவிட்டேன், அவரிடமிருந்து இரத்த இழப்பீடு எதுவும் கேட்கவும் வேண்டாம் தண்டனையும் தர வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டவராக செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்,

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

மரணத்தை தழுவிய ஷேக் அலி அல் சாலேஹ் பெருந்தன்மை, சுயநலமின்மை, நற்செயல்களில் முந்திக் கொள்ளுதல் போன்ற நற்குணங்களை கொண்டவர். கவிதை வடிப்பதிலும் சிறந்து விளங்கியதால் புகழ்பெற்ற ஹாத்திம் அல் தாய் என்ற கவிஞருடன் ஒப்பிடும் வகையில் அவரது ஊர் மக்கள் ஹாத்திம் அல்மா என சிறப்புடன் அழைத்து வந்துள்ளனர். இறக்கும் தருவாயிலும் தன்னையே வழங்குவதை தவிர வேறு ஏதும் அவரிடமில்லாததால் அந்த டிரைவரை மன்னித்து சென்றுள்ளார் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவே இம்மண்ணின் இயற்குணம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...