Pages

Tuesday, July 3, 2018

பட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (03.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கரம்பயம் ஊராட்சியில் சுமார் 2.9 ஹெக்டேர் பரப்பிலான நல்லேரி மற்றும் சுமார் 2.87 ஹெக்டேர் பரப்பிலான புது ஏரி ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி இப்பருவத்திற்குள் தண்ணீர் தேக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், ஏரிக்கு  தண்ணீர் வரத்து சீராக வருவதற்கு வரத்து வாய்க்கால்களை அகலப்படுத்திட அறிவுறுத்தினார்.

பின்னர், கரம்பயம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்குசாவடி மையத்தில் சாய்வு தளம் அமைத்திடவும், மைய வரைபடத்தினை தயார் செய்திடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.  தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டம் குறித்து கேட்டறிந்து நன்கு படிக்குமாறு  அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் மணிமேகலை என்பவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மழவேனிற்காடு ஊராட்சி, நடுவிக்காடு பகுதியில் அறிவுசெல்வம் என்பவருக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள பசுமை வீட்டினையும், அதே பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். 

ஆய்வுகளின் போது ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (பொ) வெங்கடாஜலபதி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, வட்டாட்சியர் சாந்தகுமார், நகராட்சி ஆணையர் ஷேக் அலாவுதீன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...