Pages

Wednesday, July 25, 2018

உலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்து நெரிசல்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 25
உலக வரலாற்றில் இடம் பெற்ற சில மோசமான போக்குவரத்து நெரிசல்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.
1. ஹைனான், சீனா
நடப்பு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனர்களால் 7 நாட்கள் கொண்டாடப்படும் லூனார் (சந்திர) புத்தாண்டையொட்டி ஹைனான் நகரில் சுமார் 10,000 கார்கள் சுமார் 6.2 மைல் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசலால் நகர இயலாமல் சிக்கிக் கொண்டன. ஹைக்கோ நகரின் கியோங்ஸோ கடல் பிரதேசத்தை ஒட்டி உருவாகிய புகை மண்டலமே இந்த போக்குவரத்து நெரிசலின் பிரதான காரணமாக பின்பு கண்டறியப்பட்டது.

2. குருகிராம், இந்தியா
2016 ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையினால் இந்தியாவின் தொழில் நகரங்களில் ஒன்றான குருகிராமில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நத்தை வேகத்திற்கு சென்றதுடன் இந்த போக்குவரத்து  பாதிப்பு 12 மணிநேரத்திற்கு மேல் நீடித்ததால் சுமார் 19.3 கி.மீ (12 மைல்) தூரத்திற்கு வாகனங்களும் மழைநீருக்கு ஈடாக தேங்கியது.

3. பிரேபெஸ், இந்தோனேஷியா
2016 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் பிரேபெஸ் என்ற நகரில் முக்கிய நெடுஞ்சாலையில் ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை குடும்பத்துடன் கொண்டாடச் சென்ற வாகன ஓட்டிகளால் சுமார் 21 கி.மீ (13 மைல்) தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டு 3 நாட்கள் நீடித்ததன் விளைவாக சுமார் 12 பேர்கள் மரணமடைந்தனர்.

4. பெய்ஜிங் - ஹாங்காங் - மகாவ் எக்ஸ்பிரஸ் ஹைவே
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சோதனைச்சாவடியில் ஏற்பட்ட தாமதத்தல் '12' நாட்கள் வாகன ஓட்டிகள் காத்திருந்த சோகம் நிகழ்ந்தது, அவர்களுடைய விடுமுறை கொண்டாட்டங்கள் சாலையிலேயே வேதனையுடன் நிறைவடைந்தது. இந்த சோதனைச்சாவடியில் சுமார் 50 லேன்களில் வரும் வாகனங்கள் 20 லேன்களுக்குள் செல்லுமாறு சுருக்கப்படுகிறது இதனால் சுமார் 100 கி.மீ.க்குள் (62 மைல்) பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

5. சவோ பவ்வோ, பிரேசில்
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகக் கோப்பை கால்பந்தாட்டங்கள் நடைபெற்று வந்த அதேவேளை இன்னொரு புறம் மக்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் முழுமை பெறாத பல கட்டிட பணிகள் போன்றவற்றால் சுமார் 344 கி.மீ (241 மைல்) தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கித் திணறியது.

6. சவோ பவ்லோ, பிரேசில்
இயல்பாகவே டிராபிக் நெரிசலால் சவோ பவ்லோ நகரம் திணறும், நெரிசலில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மக்கள் பொறுமையாக காத்திருந்து காருக்குள்ளேயே ஒரு திரைப்படத்தையே பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்த பொறுமைசாலிகளின் பொறுமையை மேலும் சோதிப்பது போல் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாராந்திர விடுமுறையுடன் கூடுதலாக அரசு விடுமுறையும் சேர்ந்து வர சுமார் 192 மைல்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து... நின்றன.
7. மாஸ்கோ ~ ரஷ்யா
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாஸ்கோவில் வீசிய பனிப்புயலால் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டப்ஸ்பர்க் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் சுமார் 201 கி.மீ (125 மைல்) தூரத்திற்கு வாகனங்கள் 3 நாட்கள் தேங்கி நின்றன. இந்தப் படம் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகை அருகே 2012 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி எடுக்கப்பட்டது.

8. சிகாகோ, இல்லினாய்ஸ், யு.எஸ்.ஏ
2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 20 இஞ்ச் (51 செ.மீ) அளவிற்கு பெய்த பனிப்பொழிவால் வாகனங்கள் சுமார் 12 மணிநேரம் பனிக்குள் புதைந்து நின்றன.
9. நியூயார்க், யு.எஸ்.ஏ
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வேல்டு டிரேட் சென்டர் எனும் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை தொடர்ந்து நியூயார்க் நகரிலுள்ள பாலங்கள், சுரங்கவழிப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு அவசரகால உதவிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் நகர் முழுவதுமே போக்குவரத்து சில நாட்களுக்கு ஸ்தம்பித்து நின்றது.

10. பெய்ஜிங், சீனா
2010 ஆம் ஆண்டு பெய்ஜிங் - திபெத் எக்ஸ்பிரஸ் ஹைவே இடையே சுமார் 100 கி.மீ (62 மைல்) தூரத்திற்கு தேங்கிய வாகனங்களால் '12' நாட்களுக்கு நகரவே முடியவில்லை, காரணம் பேரழிவுகளோ அல்லது தட்பவெப்பமோ இல்லை. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் அச்சாலையில் இயங்கியது மட்டுமே காரணமாம். இந்தப்படம் பெய்ஜிங் சுற்றுச்சாலையில் எடுக்கப்பட்டது.
11. ஹவுஸ்டன், டெக்ஸாஸ், யு.எஸ்.ஏ
2005 ஆம் ஆண்டு கேட்டகரி எண். 5 எனும் பிரிவின் கீழ்வரும் பலம் வாய்ந்த ரிட்டா எனும் புயல் வீசியதால் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் சேமடைந்தன. ரிட்டா புயல் வீசும் என்ற செய்தி நெருங்க நெருங்க ஹவுஸ்டனின் இருந்த சுமார் 2.5 மில்லியன் மக்களும் ஒருசேர வெளியேற துவங்கியதால் 161 கி.மீ (100 மைல்) தூரத்திற்கு 48 மணிநேரம் போக்குவரத்து தேங்கி நின்றது.
12. டோக்கியோ, ஜப்பான்
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 காரணங்களுக்காக இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டது. 2. விடுமுறை முடிந்து ஏராளமானோர் வீடு திரும்பியதன் விளைவாக ஜப்பானின் மேற்குப்புற நகரங்களான ஹியூகோ - ஷிகா இடையேயான 135 கி.மீ (84 மைல்) சாலையில் சுமார் 15,000 வாகனங்கள் தேங்கின.
13. கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள்
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெர்லீன் நகரை பிரித்துக் கொண்டிருந்த சுவர் உடைத்தெறியப்பட்டு பெர்லீன் நகரமும் இரு ஜெர்மனி நாடுகளும் இணைந்து ஒன்றாயின. இரு நாடுகளாக பிரித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மானிய மக்கள் பேராவலுடன் தங்களின் உறவுகளையும் நண்பர்களையும் சந்திப்பதற்காக இருபுறமும் சுமார் 18 மில்லியன் பேர் (1 கோடியே 80 லட்சம்) வாகனங்களுடன் குவிந்ததால் 30 மைலுக்கு (48 கி.மீ) தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியது. இந்த ரோட்டில் அதிகப்பட்சம் ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

14. லியொன் - பாரீஸ், பிரான்ஸ்
1980 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியொன் நகரிலிருந்து பாரீஸ் வரும் 175 கி.மீ (189 மைல்) சாலையின் நீளத்திற்கு தீவிர சீதோஷ்ண சூழ்நிலையால் வாகனங்கள் தேங்க ஆரம்பித்தது. இந்தப் படம் பாரீஸ் நகரின் லா கன்கோர்டு சதுக்கத்தில் அப்போது எடுக்கப்பட்டது.

15. நியூ யார்க் - யு.எஸ்.ஏ
1969 ஆம் ஆண்டு புகழ்பெற்ற வுட்ஸ்டாக் மியூசிக் பெஸ்டிவல் எனப்படும் விழாவில் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் என்பவர் பாடினார். இவருடைய இசை நிகழ்ச்சியை காண சுமார் 50,000 பேர் வருவார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருக்க, வந்ததோ சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) பேர் இதனால் நியூயார்க்கின் த்ருவே 3 நாட்களுக்கு வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

சுமார் 50,000 வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அதே இடத்தில் விட்டு விட்டு பொடிநடையாக நடையை கட்ட, நிகழ்ச்சியாளர்களும் பாடகர் குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

Source: Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...