Pages

Monday, July 16, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 58 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/07/2018  அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : சிறார். முஆது  S/o மஹ்மூது ( உறுப்பினர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       :  N. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  :  M. அப்துல் மாலிக் ( இணை செயலாளர் )
நன்றியுரை      : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) குர்பானி திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு ஆடு, மற்றும் மாடு ( கூட்டுக்குர்பானி விஷயமாக ) அதன் விலை தொகையை விளக்கி சொல்லி அடுத்த கூட்டத்தில் விருப்பமுள்ள ரியாத் வாசிகள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான பொறுப்புதாரி சகோ. அப்துல் மாலிக் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொலைபேசி என் : 0550629583
கூட்டுக்குர்பானி 1900 /-  தனி நபர் 8000 /- ( APRX )

2) கடந்த நோன்பின் இறுதியில் ஜகாத் ,பித்ரா, சதகா நிதியை ரியாத்திலிருந்து பைத்துல்மாலுக்காக அனுப்பிய முழுத்தொகைக்கு ஆதரவும் பொருளாதார உதவியும் செய்த அதிரை வாசிகள் அனைவரையும் ரியாத் பைத்துல்மால் கிளையின் சார்பாக முழு நன்றியை தெரிவித்து மேலும் இதுபோன்ற சேவைகளை தொடர துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) ABM தலைமையகம் மூலம் வட்டியில்லா நகை கடன் அதிகரிக்கும் விதத்தில்  RECOVERING DEPOSIT விஷயமாக நினைவூட்டப்பட்டு பங்களிப்பு விருப்பமுள்ள நபர்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையில் கடந்த 5 வருட காலமாக சிறந்த முறையில் பொறுப்புதாரியாக பணியாற்றிய இரண்டு கீழ்காணும் சகோதரர்களை பாராட்டியும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
( i )  M.I.அப்துல் ரசீது ( செயலாளர் )
( ii ) J.M.நெய்னா முகம்மது ( கொள்கை பரப்பு செயலாளர் )

5) மேலும் அந்த வெற்றிடத்தை நிரப்பும் பட்சத்தில் இக்கூட்டத்தில் ஒருமனதாக கீழ்காணும் பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது.
( i )  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
( ii ) A. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
( iii )  P. இமாம் கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

6) ஆம்புலன்ஸ் தொடர்பான போதிய விளக்கம் அளிக்கப்பட்டு சர்ச்சைகள் முடித்து வைக்கப்பட்டது. மேலும் அதிரையிலுள்ள மீடியாக்கள் அனைவரும் எந்தவித பாகுபாடு இன்றி ஊரின் நலன் கருதி இனி வரும் ABM தலைமையகம் மாதாந்திர கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு எல்லா மீடியாக்களிலும் ஒரே நேரத்தில் செய்திகளை வெளியிடுமாறு ABMR கிளை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...