Pages

Saturday, July 7, 2018

அதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்சை அணி சாம்பியன் ~ பரிசளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 24 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 18 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 16 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

தொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், மதுரை, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், அதிரை SSMG, புதுக்கோட்டை, பள்ளத்தூர், நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர் ஆகிய 4 அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை SSMG, நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர் அணிகள் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில் நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

இதன் பின்னர், மைதானத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர் அணிக்கு ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெற்ற அதிரை SSMG அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், அக்பர் ஹாஜியார், ஜமாலுதீன் ஹாஜியார், தஞ்சை மாவட்ட கால்பந்தாட்ட கழகத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், மேன் 'ஆஃப் த மேட்ச்' பட்டம் தஞ்சை அணியைச் சேர்ந்த சுடான் நாட்டு வீரருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு சுவிஸ்டர் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது. தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அதிரை கால்பந்தாட்டக் கழக தலைவர் அதிரை அகமது ஹாஜா வரவேற்றார். பின்னர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாட்டினை அதிரை கால்பந்தாட்டச் செயலாளர் எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், புர்கானுதீன், புஹாரி, அஸ்ரப் ஆகியோர் செய்தனர். இன்றைய இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...