Pages

Sunday, July 15, 2018

குவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை!

அதிரை நியூஸ்: ஜூலை 15
குவைத்தின் பயான் சிட்டி (Bayan City)  எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு வாகன விபத்தில் அந்த காரை ஓட்டி வந்த குவைத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் அவரது வயிற்றில் இருந்த்தையை சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தையை வெளியே எடுத்து ஒரு உயிரை காப்பாற்றியுள்ள நிகழ்வு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

விபத்தில் மரணமடைந்த அப்பெண்ணுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆறாவதாக இறந்தபின் அவர் பெற்றெடுத்த குழந்தையும் தாயை இழந்த அனாதையாகியுள்ளதால் அக்குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பெரும் சோதனைகளை வலைத்தளங்களில் வெளியான இச்செய்தி சோக அலைகளை உருவாக்கியுள்ளது.

குவைத்தின் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர் பாதர் அல் மத்தார் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுத்திருந்த தனது அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது, குவைத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் 6 சாலைவிபத்துக்கள் நிகழ்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 917,447 விபத்துக்கள் குவைத்தில் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகம், சிவப்பு விளக்குகளில் நிற்காமல் செல்லுதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பாவித்தல் போன்றவைகளாலேயே ஏற்படுகின்றன. இத்தகைய விபத்துக்களால் மனித இழப்புக்கள், சமூக இழப்புக்கள் மற்றும் பொருளாதார இழப்புக்கள் போன்றவற்றை நேரிடையாகவும் மறைமுகமாகவும் சந்திக்க வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை இன்றைக்கும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...