Pages

Thursday, July 5, 2018

திடீர் திருப்பம்! கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற்று அமீரகத்திற்குள் வரலாம்!!

அதிரை நியூஸ்: ஜூலை 05
கடந்த 2017 ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அண்டை அரபு நாடான கத்தாருடன் தங்களது ராஜிய உறவுகளை முற்றாக முறித்துக் கொண்டதுடன் விமானம், கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்தையும் அடியோடு தடை செய்தன. மேலும் 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு கத்தார் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டு இருந்தனர்.

இருதரப்பு தடைகளும் ஒரு ஆண்டை கடந்துவிட்ட நிலையிலும் எத்தகைய பரஸ்பர நல்லிணக்க முன்னேற்றமும் எற்பட்டுவிடவில்லை என்ற போதும் அமீரகம் உத்தரவிட்டிருந்த 14 நாட்கள் காலக்கெடுவை தாண்டிய பின்பு அமீரகம் கத்தாரிய பிரஜைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தேவையான சட்டங்களை பிறக்காததுடன் கட்டாய வெளியேற்றல் தொடர்பிலான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

2017 ஜூன் 5 ஆம் தேதிய உத்தரவுக்குப் பின்னும் தொடர்ந்து அமீரகத்திற்குள் தங்கியிருக்கும் கத்தார் பிரஜைகள் தங்களுடைய தங்குமிட அனுமதியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தேவையில்லை மாறாக அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி வழங்கப்பட்ட (109718002626) என்ற ஹாட்லைன் போனில் தொடர்பு கொண்டு இருப்பை தெரிவித்தால் போதுமானது என்றும் அமீரகத்திற்குள் மீண்டும் வர விரும்பும் கத்தார் பிரஜைகள் முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்து அமீரகத்திற்குள் வரலாம் எனவும் அவர்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அமீரகத்திறகுள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

அறிஞர் அண்ணா தனித் திராவிட நாடு கொள்கையை கைவிடும் போது, நாங்கள் தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகின்றோம் ஆனால் அதற்கான காரணங்களை கைவிடவில்லை அது அப்படியே இருக்கின்றன என சொன்னது போலவே, மானே! தேனே! பொன்மானே! என அந்த அறிக்கையில் வழமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தாலும் இருநாட்டு மக்களும் வரவேற்கும், எதிர்கால நல்லுறவிற்கு அடிகோலும் ஒன்றாக இது அமையட்டும், அமைய வேண்டும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...